படை, தேமல், படர் தாமரையை போக்க எளிய வைத்திய குறிப்பு!

வெற்றிலைச் சாற்றை எடுத்து தேமல் மேல் தடவ தேமல் மறையும். கற்பூரவள்ளி இலைச்சாற்றை எடுத்து தேமல் மேல் தேய்த்தால் தேமல் மறையும். பூவரசுக்காயை உடைத்து, அதில் மஞ்சள் நிற பாலை எடுத்து படை மேல் பூசி வந்தால் படை மறையும்.

சீமை அகத்தி இலையை எலுமிச்சம் சாற்றுடன் கலந்து அரைத்து படர் தாமரை மீது தடவலாம். ஆவாரை வேரை எலுமிச்சம் பழச்சாற்றுடன் அரைத்து வெண் தேமல் மீது தடவலாம். நவச்சாரத்தை பொடியாக்கி தேன் கலந்து படைமேல் தடவ படை மறையும். தேங்காய் எண்ணெய்யில் வெள்ளைப் பூண்டை போட்டு காயவைத்து எண்ணெய்யை தேமல் மீது தொடர்ந்து போட தேமல் மறையும்.

பப்பாளி இலையின் சாறை பிழிந்து படர் தாமரை மீது பூசி வர படர் தாமரை மறையும். மாமரப் பிசினோடு எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேமல், படை மேல் பூசி வரலாம். முந்திரி மரபபட்டையிலிருந்து சாற்றை எடுத்து தேமல் மேல் பூச தேமல் மறையும். வேப்ப இலையை அரைத்து நீர்விட்டு காய்ச்சி தேமல் மீது தடவ தேமல் மறையும். வெள்ளைப்பூண்டு, வெற்றிலை சேர்த்து நன்றாக அரைத்து வெண் தேமல் மீது தடவ தேமல் மறையும்.

பூவரசு காயின் சாற்றை படர் தாமரை மீது தடவி வர அது மேலும் படராமல் குணமாகும். படர் தாமரை உள்ள இடத்தில் சந்தனக் கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்துத் தடவ படர் தாமரை மறையும். அறுகம் புல்லுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்துவர தேமல் மறையும்.