பொதுச்சுடர் ஏற்றும் உரிமை எனக்கு மட்டும் தான் உண்டு. சிவாஜிலிங்கத்தின் கொழுப்புக் கதை (Video)

விடுதலைப் புலிகள் ஈழப்போரில் வீரச்சாவடைந்த போராளிகளை நினைவுகூருவது, மதிப்பது தமது அடிப்படைக் கடமைகளில், கொள்கைகளில் ஒன்றாகக் கருதுகிறார்கள். மாவீரர் நாளாக நவம்பர் 27 விடுதலைப் புலிகளால் 1989 இல் அறிவிக்கப்பட்டது. 

தமிழீழ மாவீரர் நாளாக இந்நாளைத் தேர்ந்தெடுத்ததற்கு தமிழீழ போராட்ட வரலாற்றுடன் இணைந்த ஒரு முக்கிய காரணம் உள்ளது. இந்த நாளில்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளியான சங்கர் (செ.சத்தியநாதன்) முதலாவது வீரமரணம் அடைந்தார்.

தொடக்க காலங்களில் மாவீரர் நாளில் ஈகைச்சுடரேற்றுவது நள்ளிரவு 12.00 மணிக்கு என்றிருந்தது. பின்னர் அது மாலை 06.05 மணிக்கு என்று மாற்றப்பட்டு விட்டது. அதற்கும் காரணம் உள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற் களப்பலியான லெப்டினன்ட் சங்கர் வீரமரணமடைந்தது நவம்பர் 27, 1982 அன்று மாலை 6.05 மணிக்கு. 

லெப். சங்கர் தனது தாய் நாட்டுக்காக தன் இன்னுயிரை அணைத்துக் கொண்ட அதே நாள், அதே நேரமான 6.05 மணியே தமீழீழ மாவீரர்நாளில் ஈகைச்சுடரேற்றும் நேரமானது. அன்றிலிருந்து இன்றுவரை இந்த மரபே தமிழ் மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றது. இனியும் இந்த மரபு தொடர வேண்டும். 

ஆனால் கோயிலுக்கு நினைத்த நேரம் சென்று பொதுமக்கள் அவரவர் இஸ்டத்துக்கு எள்ளெண்ணெய் எரித்துவிட்டு திரும்புவது போல, இந்த மாவீரர்நாள் சுடரேற்றும் மரபையும் ஒரு ஒழுங்கு கட்டுப்பாடு இன்றி செல்லாக்காசு ஆக்க வேண்டும் என்ற இராணுவப்புலனாய்வின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய சிவாஜிலிங்கம் செயற்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டும் 2015 நவம்பர் 27 அன்று, மாலை 6.05 மணிக்கு சுடரேற்றும் மரபை தவிர்த்து உதாசீனம் செய்து காலை 7.00 மணிக்கே நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு போய் விளக்கெரித்துவிட்டு, மாவீரர்களுக்கு விளக்கெரித்ததாக ஊடகங்களுக்கு படம் அனுப்பினார். செய்தி இல்லாமல் தூங்கி வழிந்த ஊடகங்களும் இதற்குப் பின்னால் உள்ள சிவாஜிலிங்கத்தின் வரலாற்று அழிப்பை அறியாமல் ஏதோ செய்தி கிடைத்தால் சரி என்ற கணக்கில் பிரசுரித்தார்கள். 

இம்முறையும் சிவாஜிலிங்கத்தைக் கொண்டு தமிழ் மக்களின் மாவீரர்களுக்கு விளக்கெரிக்கும் மரபை கேலிக்கூத்தாக்கி செல்லாக்காசு ஆக்கிக் காட்டுவோம் என்று இராணுவப்புலனாய்வாளர்கள் நம்பிக்கையோடு சொல்லிச் சிரிக்கிறார்கள். 

இதுதொடர்பில் சிவாஜிலிங்கத்திடம் ஒருவர் கேட்டபோது, ‘இந்த மரபு கிரபு அதையெல்லாம் கொண்டு போய் குப்பையில போடுங்க. எனக்கு அது பற்றியெல்லாம் தெரியாது. வல்வெட்டித்துறையை சேர்ந்த எனக்கு உரிமை இருக்கு. பல அமைப்புகள் ஒன்று கூடி பொதுவா ஒரு மாவீரர் நாளை ஒழுங்குசெய்து அதில் எனக்கு பொதுச்சுடர் ஏற்றும் வாய்ப்பு தந்தால் பிரச்சினையில்ல. அதுவரைக்கும் நான் என்ட இஸ்டத்துக்கு எந்த நேரமும் எந்த இடத்தில வேண்டும் என்டாலும் விளக்கு எரிப்பன்.’ என்று அடாவடியாக சொல்லியுள்ளார். 

இதேவேளை யாழ். மாவட்ட அரச எம்.பி ஒருவரிடம் இராணுவ புலனாய்வாளர்கள் சொல்லியுள்ளனர். 'சிவாஜிலிங்கத்தோடு ஒரு உறவை வைச்சுக்கொள்ளுங்கோ. அவரைக்கொண்டு சில வேலைகள செய்ய முடியும். அவர் யாருன்ட கட்டுப்பாட்டுக்குள்ளயும் நிக்கமாட்டார். எங்களத் தவிர' என்று கூறியுள்ளனர். 

இப்பிடியே போனால்… நாளை மலசலகூடத்துக்குள்ளேயும், குப்பைத்தொட்டிக்குள்ளேயும் மாவீரர்களுக்கு விளக்கெரிய செய்து விடுவாங்கள் போலிருக்கே.