காட்டிக் கொடுப்பில் ஈடுபடும் கிளிநொச்சி ஊடகவியலாளர் (Photos)

யாழ் பல்கலைகழக மாணவா்களின் படுகொலையை கண்டித்து வடக்கில் மேற்கொள்ளப்பட்ட கதவடைப்பு போராட்டத்தின் போது கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் அமைதியின்மையை ஏற்படுத்தியவா்கள் என்று கருதப்பட்டவா்களை ஒரு சில நாட்களின் பின்னா் கைது செய்யப்பட்டு நீதி மன்றில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டாா்கள்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரிடம் கிளிநொச்சியில் தன்னை பிரபல ஊடகவியலாளா் என்று சொல்லித்திரியும் ஒருவா் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சொல்லியிருக்கின்றாா். 

'பொலீஸாரும்,சிஐடியினரும் ஆா்ப்பாட்ட படங்களை என்னிடம் கேட்டனா் நான் கொடுக்கவில்லை ஆனால் தமிழ்ச்செல்வன்தான் அந்தப் படங்களை கொடுத்துள்ளான் அதனை வைத்துதான் உங்களை கைது செய்துள்ளனா்' என்று.

இதில் என்ன விடயம் என்றால்,

1.ஆா்ப்பாட்டம் இடம்பெற்ற அன்றைய தினம்(25-10-2016) நான் பணியாற்றும் நிறுவனத்தின் மாதாந்த கூட்டத்திற்காக கண்டியில் உள்ள அலுவலகத்தில் இருந்தேன். கிளிநொச்சியில் இல்லை.

2. அப்படி நான் கிளிநொச்சியில் இருந்திருந்தாலும் நான் எடுத்த படங்களை எச்சந்தா்ப்பத்திலும் எவருக்கும் கொடுக்கவேண்டிய தேவை எனக்கு இல்லை. அது எனது தொழில் தா்மமும் இல்லை.

3. நாங்கள் படம் கொடுத்துதான் அதனை கொண்டு ஆட்களை அடையாளம் காணவேண்டிய தேவை பாதுகாப்புத் தரப்புக்கு இல்லை காரணம் ஒரு சம்பவத்தின் போது ஊடகவியலாளா்களை விட அவா்கள் தரமான கையடக்க தொலைபேசி மற்றும் புகைப்பட கருவிகளுடன் அங்கு நிற்பாா்கள்.

4. குறித்த ஊடகவியலாளா் 2009 முன் இருந்து இப்படிதான் ஊடகத்துறையில் இருக்கின்ற தனக்கு எதிரானவா்கள் மீது பச்சைப்பொய்யான அவதூறுகளை பரப்பி தொடா்ச்சியாக எந்த ஊடகத்திலும் நிலைத்துநின்று பணியாற்றாமல் ஓடிக்கொண்டிருப்பவா்.இது கிளிநொச்சியில் உள்ள ஊடகத்துறைசாா்ந்த அனைவருக்கும் தெரியும்.

எனவே தனிப்பட்ட ரீதியில் ஊடகத்தொழில் ஏற்பட்ட விரோதம் காரணமாக இவா் இவ்வாறு கீழ்தரமான வேலைகளில் தொடா்ச்சியாக ஈடுப்பட்டு வருகின்றாா்.

நன்றி: தமிழ்ச்செல்வன்