யாழ். பல்கலைக்கழகத்தில் காட்டிக் கொடுப்பில் யார் அந்த கறுப்பு ஆடுகள்? (Photos)

யாழ். பல்கலைக்கழக பாலசிங்கம் ஆண்கள் விடுதிக்குள் நேற்று 22.11.2016 செவ்வாய் கிழமை இரவு 11.42 மணியளவில் (ஏகே 47 மற்றும் பிஸ்டல்) துப்பாக்கிகளுடன் பொலிஸார் அத்துமீறி நுழைந்துள்ளனர். 

விடுதிக்குள் நடந்துகொண்டிருந்த மாணவன் ஒருவனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை, தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தப்படுவதாக, பல்கலைக்கழகத்துக்குள் இருந்து யாரோ ஒருவர் திரிபுபடுத்தி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்தே பொலிஸார் ஆயுதங்களுடன் பாதுகாப்பு உத்தியோகத்தரை அச்சுறுத்தி விட்டு உள்நுழைந்து மாணவர்;களையும் மிரட்டியிருக்கின்றார்கள். 

மாணவர்கள் விடயத்தில் இவ்வாறானவர்களின் தலையீடுகள் குறித்த கேள்வி ஒருபக்கமிருக்க, இந்தத் தடவை விடுதியினுள் உள்நுழைந்துள்ள இவர்களது செயற்பாடு எதற்கான ஆரம்பம்? அல்லது மாவீரர் தினத்தினை ஒடுக்குவதற்கான முன்னேற்பாடா? என்பது நாமனைவரும் சிந்திக்க வேண்டியதொரு விடயம். இந்த சம்பவமும் இனிவரும் ஏதோ ஒன்றிற்கான நீட்சியே. 

மேலும் இப்படியான சம்பவங்கள் நடப்பதுதான் நல்லது. இப்போது பல்கலைக்கழங்களில் இருப்பவர்கள் 2009இல் தமிழ் இனவழிப்பு நடந்தபோது 5ம், 6ம் வகுப்புகளில் கற்றுக் கொண்டிருந்தவர்கள். அவர்களுக்கு போராட்டம் பற்றி தெளிவின்மை காணப்படுகிறது. எனவே சிங்களப்படைகள் இப்படியான அச்சுறுத்தல்களை செய்வதால் பல பாடங்களை தாங்களாகவே கற்றுக்கொள்ளக் கூடிய சூழல் உருவாக இது வாய்ப்பாக அமைகின்றது. 

இது தவிரவும் பல்கலைக்கழகத்துக்குள் இருந்து சிங்கள படைகளுக்கு தகவல் வழங்குவதில் சிங்கள மாணவர்களை விடவும் முஸ்லிம்கள் தான் மும்முரமாக இயங்குகிறார்கள். குறிப்பாக முஸ்லிம் பெண்கள். 

பெண்கள் விடுதிகளில் எல்லா தமிழ் பெண்களுடனும் ‘கட்டாயமாக’ ஒரு முஸ்லிம் பெண் இணைக்கப்பட்டுள்ளாள். தமிழ் பெண்கள் தமது நண்பர்களுடன் கதைப்பதையும், பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவங்களை விடுதியில் பேசும் போதும் அவற்றை எடுத்து திரித்து சிங்களவர்களிடமோ அல்லது முஸ்லிம் புலனாய்வு அதிகாரிகளிடமோ கொண்டுபோய் சேர்க்கிறார்கள். 

உதாரணத்துக்கு இங்கு ஒரு சம்பவத்தை சுட்டிக்காட்ட முடியும். 2012 இல் மாவீரர் தினத்தன்று ஆண்கள் விடுதி இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட, அந்த தகவல் பெண்கள் விடுதிக்கு பரிமாறப்படுகின்றது. விடுதியில் இருந்த பெண் பிள்ளைகள் விடுதியின் மொட்டைமாடியில் எப்படியாவது தீபம் ஏற்ற வேண்டும் என்ற முடிவிற்கு வருகிறார்கள். தீபம் ஏற்றுவதற்கு ஆயத்தத்துடன் இருக்காததால் தங்களது உடுப்புகளை மண்ணெண்ணையில் நனைத்து கொழுத்தியிருக்கிறார்கள்.

எந்தெந்த அறைகளில் இருந்து உடுப்புகள் கொண்டுபோகப்பட்டன? என்பது முதல் பல விடையங்களை இராணுவத்திற்கு போட்டுக் கொடுத்தது மட்டுமன்றி ஏறத்தாள 150 மாணவிகள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தமைக்கான காரணமும் இந்த முஸ்லிம்கள் தான். 

இதற்கு என்னதான் செய்ய முடியும்? ஒன்றுமே செய்ய முடியாதபடி உளவு வேலைகள் பலமாக இருக்கிறது. தடுக்கி விழுந்தாலும் ஒரு இராணுவ புலனாய்வுக்காரன் மீதே விழ வேண்டியிருக்கிறது. பிற்போராட்ட நிலைமையிற் பாரிய தாக்கத்தைக்கொண்ட அவர்களது கணிப்பு மிகக்கச்சிதமாக நடைபெறுகிறது. இதிலிருந்து மீள்வது மிகக்கடினம். மக்கள் சார்ந்த முற்போக்குக் கட்சிகள் இதை ஓரளவுக்கு தடுக்கமுடியும். ஆனால் எதையும் மக்கள் மயப்படுத்துவதே முதற்படியாக இருக்கிறது.