பிஸ்டலை லோட் பண்ணி நடுவீதியில் சுடுவேன் என மிரட்டிய தெல்லிப்பளை பொலிஸ் (Photos)

சுன்னாகத்தில் இருந்து மல்லாகம் நோக்கிச் சென்ற சிறிய பட்டா  ரக வாகனம் ஒன்று நடு வீதியில் ஜக்கட் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை கோர்ன் அடித்து முந்திக் கொண்டு வழமை போல் சென்றுள்ளது. 

எனக்கு யாரடா கோர்ன் அடிக்கிறது. என டென்சனான ஜக்கட் அணிந்து சென்ற தெல்லிப்பளை பொலிஸ் உத்தியோகத்தர் நரசிம்மா விஜயகாந்த் பாணியில் பிஸ்டலை எடுத்து மிரட்டியுள்ளார். 

எதையும் பொருட்படுத்தாமல் பொதுமகன் வாகனத்தை செலுத்திச் சென்றுள்ளார். 

வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் குறித்த வாகனத்தை மல்லாகம் பழைய நீதிமன்றம் முன் வைத்து மடக்கியுள்ளார். 

அங்கே வைத்தும் பிஸ்டலை வெளியே எடுத்து லோட் பண்ணி மீண்டும் சுட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். 

அதற்குள் அங்கே அதிகளவான மக்கள் திரண்டதால் சிறிது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அங்கிருந்த ஒருவர் 119 பொலிஸ்  முறைப்பாட்டுப் பிரிவுக்கு கைபேசியில் அழைத்து  புகாரளித்துள்ளார். 

முறைப்பாட்டின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தெல்லிப்பளைப் பொலிஸார் வாகனத்தில் வந்த இருவரையும், பொலிஸாரையும் அழைத்துக் கொண்டு பொலிஸ் நிலையம் சென்றுள்ளனர். 

கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுடப்பட்டு ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், பொலிஸார் ஒருவர் பொதுமகன் மீது நடு வீதியில் வைத்து துப்பாக்கியால் சுடுவேன் என மிரட்டிய சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. 

கஞ்சா கடத்துகிறவன், வாள் வெட்டு ரவுடிகள் மீது திரும்பாத பொலிஸாரின் பிஸ்டல் அப்பாவிப் பொதுமகனை நோக்கி திரும்புவதனை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. 

பொதுமகனை சுட முயன்ற பொலிஸ் உத்தியோகத்தர் மீது துறை ரீதியிலான விசாரணை உடனடியாக அவசியமானது.  

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது உடனடியாக சட்டம் தன் கடமையை சரிவரச் செய்ய வேண்டும்.  

தாங்கள் வீதியால் சென்றால் தங்களை பொதுமக்கள் ஆராதிக்க வேண்டும், விழுந்து கும்பிட வேண்டும் என நினைக்கும் பொலிஸ் அராஜக மனநிலையை என்னவென்று சொல்ல? அதிகாரம் ஆணவத்தைக் கொடுத்தால் அழிவே மிஞ்சும்.