மாவீரர் நாள் தலைமை போட்டி. பிரான்சில் கத்தி குத்து (Video)

பிரான்ஸ் நாட்டில் ‘ஹார்டினேஸ் ஸோனில்’ மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகளுக்காக துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துக்கொண்டிருந்த போராளிகள் கட்டமைப்பு என்று சொல்லப்படும் ஒரு குழுவினர் மீது, ரிசீசீ என்று சொல்லப்படும் மற்றுமொரு குழுவான தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் கத்திகள் மற்றும் மதுபான போத்தல்களை கொண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. 

மாவீரர் நாளை தலைமை ஏற்று யார் நடத்துவது? என்ற குழுவாத போட்டிகள் காரணமாகவே நேற்று திங்கள் கிழமை 21.11.2016 அன்று இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தங்கள் அமைப்பைத் தவிர வேறு யாரும் மாவீரர் நாள் அனுஸ்டிக்க முடியாது - அனுஸ்டிக்க கூடாது என்று ரிசீசீ அமைப்பினர் வாக்குவாதம் செய்த நிலையில், பின்னர் அது கைகலப்பாக மாறி கத்திகள் மற்றும் மதுபான போத்தல்களை உடைத்து அதைக்கொண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கத்திக்குத்தால் கடுமையாக காயமுற்றுள்ள ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

புலம்பெயர் தமிழர் அமைப்பு கோமாளிகளே! 

இங்கு ஈழத்தில் உள்ள மக்கள் உங்களிடம் கேட்கிறார்கள். சோற்றை தின்னுகின்றீர்களா? இல்லை சோறு சமிபாடடைந்த பின்னர் வெளிவரும் மலத்தை தின்னுகின்றீர்களா? 

இந்த குழு வாதம், மத வாதம், குறுக்கு புத்தி எல்லாற்றையும் கடந்த தமிழ் தேசியத்தின் சொத்துகள் தான் மாவீரர்கள். அந்த ஒப்பற்ற மறவர்களின் புனித தியாகத்தை உங்கட விளம்பரத்துக்காகவும் - காசு கலெக்ட் பண்ணுறதுக்காகவும் ஏனடா இப்பிடி கழுவி ஊத்திறீங்கள். 

கோமாளிகளே! தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களும் அவர் கொள்கை வழிநடந்து வரலாற்றில் தடம் பதித்த மாவீரர்களும்… லண்டனை லபக்கவோ, பிரான்சை பிடிக்கவோ, கனடாவை கைப்பற்றவோ, அமெரிக்காவை அமுக்கவோ போராடவில்லை. 

‘வெளிநாட்டில் இருந்து கொண்டு தமிழீழம் பிடிப்போம்’ என்று சொல்லும் நீங்களும் உங்கள் அமைப்புகளும் உடனே புறப்பட்டு இலங்கைக்கு வாருங்கள். உங்களுக்கான போராட்ட களம் இலங்கையில் தான் இருக்கிறது. அங்கு அல்ல. சூடு சொரணை மானம் ரோசம் மயிர் இழை அளவு தானும் உங்கட உடம்பில இருந்தால் உடனே அடுத்த பிளைட்ட பிடிச்சி இலங்கைக்கு வாங்கோ. 

தமிழீழம் பிடிப்பது ஒருபுறம் இருக்கட்டும். முதலில பிளைட்ட பிடிக்க உங்களில எத்தின பேர் தயாரா இருக்கிறீயள்?  

தொடர்புடைய செய்தி:

மாவீரர் நாள்: யார் தலைமை தாங்குவது? என்ற போட்டியில் பல குழுக்கள் (Video)