பேஸ்புக் ஊடாக ஆவா குழுவுக்கு உறுப்பினர்கள் இணைப்பாம்

முகநூல் ஊடாக ஆவா குழுவிற்கு உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர் என இந்தக் குழுவுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்பய்பட்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபரிடம் பொலிஸார் நடத்திய விசாரணைகளின் போது இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஆவா குழுவின் உறுப்பினர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்த் திரைப்படங்களில் நீதிக்காக குரல் கொடுக்கும் பாத்திரங்களை உருவகித்து ஆவா குழுவினர் முகநூலில் பிரச்சாரம் செய்தததாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

ஆவா குழுவிற்கு கூடுதலான பிரச்சாரமொன்றை பெற்றுக்கொள்ளும் நோக்கிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஆவா குழுவிற்கு அரசியல் பின்னணிகள் எதுவும் இருப்பதாக இதுவரையில் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் தெரியவரவில்லை.

எவ்வாறெனினும், சில தரப்பினர் செய்யும் பிரச்சாரங்களைப் போன்று ஆவா குழு அவ்வளவு பயங்கரமான பாரதூரமான ஓர் குழு அல்ல என பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளனர்.