யாழில் தேவி மீதான சிவாஜியின் கள்ளக்காதல் அம்பலம்! (Video)

வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரெலோ சிவாஜிலிங்கம், காதல் பித்து மனநோய் பிடித்து ‘இந்தா பார் உன்னில் மோதிச் சாகப்போகிறேன்’ என்று கூறிய யாழ்தேவி ரயில் இது தான். 

‘யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் மக்கள் இன்னும் மீளக்குடியேறவில்லை. அங்கு இராணுவம் தான் உள்ளது. மக்கள் இல்லாத இடத்துக்கு ரயில் எதற்கு? இராணுவம் பயணம் செய்வதற்கா? இராணுவம் பயணம் செய்ய காங்கேசன்துறைக்கு ரயில் அனுப்பினால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்வேன்’ என்று சிவாஜிலிங்கம் தமிழ் தேசியத்துக்காக பொங்கோ பொங்கு என்று பொங்கியிருந்தார். 

இந்த சூசைட் போராட்டத்துக்கு சக மாகாணசபை உறுப்பினர் அனந்தி அக்காவின்ட ஒத்துழைப்பையும் கேட்டிருந்தார். அக்கா ‘காங்கேசன்துறை கடற்படை தளத்துக்குள்ள கறுப்பு புலியாய் பாய்ந்தாலும் பாய்வேனே ஒழிய, யாழ்தேவி முன் பாய்ந்து அற்பத்தனமாக உயிரை விடமாட்டன்’ என்று சொல்லிப்போட்டா. உயிரின்ட மதிப்பு அக்காவுக்கு மட்டும் தான் நல்லா புரிஞ்சிருக்கு. 

ஆனால் கூட்டமைப்பு வித்துவான்களோ, சிவாஜிலிங்கம் யாழ்தேவி ரயிலில் மோதி வெடிச்சு சாகிறத… வீடியோ கமராக்களை பலவித கோணங்களில பிறேம் வைச்சு பதிவுசெய்து அடுத்த முறை தேர்தலுக்கு அகலத்திரையில தமிழ் மக்களுக்கு போட்டுக்காட்டி அவரவர் வாக்கு வங்கியை நிரப்பிக்கொள்ளோனும் எண்டு போட்டிப்போட்டுக்கொண்டு பக்காவா பிளான் பண்ணியிருந்தினம். 

சிவாஜிலிங்கம் கடைசி நேரத்தில எல்லாத்தையும் சொதப்பி மொக்கையாக்கிட்டார். இதுக்காகவே இப்ப சிவாஜிலிங்கம் மேல கூட்டமைப்புக்காரர் பலர் செம கடுப்பில இருக்கினம்.  

ஆனாலும் மாவிட்டபுரம் சேனாதிராசா ஐயாவுக்கு மட்டும் தான், சிவாஜிலிங்கம் சொதப்பியது பெரிய சந்தோசமாம். 

தன்ர தேர்தல் வாக்கு வங்கி ஏரியாவுக்குள்ள புகுந்து சிவாஜிலிங்கம் பத்த வைக்கிற வெடி, எங்க தன்ர வெடியை விடவும் பெரிய சத்தமா  வெடிச்சிருமோ? என்று மனுசனுக்கு பயத்தில வேர்த்துக்கொட்டி ஒரு கிழமையா எந்திரிக்க முடியாத காய்ச்சலில கிடந்தவராம். 

அப்புறம் ‘ஐயா, வெடி வைக்கிறதில உங்கள மிஞ்ச இஞ்ச எந்தக் கொப்பனாலும் முடியாது’ என்று பக்கத்தில இருந்த ஆக்கள் குளுக்கோஸ் ஏத்தின பிறகு தான் வழமைக்குத் திரும்பி எழும்பி நடக்க வெளிக்கிட்டவராம்.  

தற்போதைய நிலைவரம் என்னவென்றால், காங்கேசன்துறையில இராணுவ பணியில இருக்கிற இராணுவத்தினர், விடுமுறையில வீட்டுக்குப் போறது என்டால்… இலங்கையின் ஒரு மூலையான காங்சேன்துறையில இருந்து ரயில் ஏறி இலங்கையின் மற்றுமொரு மூலையான காலியில போய் ஜாலியாய் இறங்கிக் கொண்டிருக்கினம் பாருங்கோ.