பைரவா படத்தின் பாடல்களை வெளியிட வேண்டாம்: விஜய் தெரிவிப்பு!

இளையதளபதி விஜய், கீர்த்தி சுரேஷுடன் நடிக்கும் பைரவா படத்தின் படப்பிடிப்புகள் வெற்றிகரமாக முடிந்துவிட்டது.

2017 ஜனவரி மாதம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதால் தற்போது படத்துக்கான எடிட்டிங், டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பாடல்கள் ரிலீஸ் செய்ய வெளியீட்டு விழா நடத்த படக்குழு விரும்ப, இளையதளபதியோ வேண்டாம் என மறுத்து இணையத்தளத்தினுள் வெளியிடுங்கள் போதும் என சொல்லிவிட்டாராம்.

அவர் இப்படி சொன்னதற்கு நடந்துகொண்டிருக்கும் சில கருப்பு பண சூழ்நிலைகளே காரணம் என்று சொல்லப்படுகிறது.

ரஜினிகாந்த் நடிக்கும் 2.௦ படத்திற்கு நடக்கும் போது, பைரவா இசை வெளியீட்டு விழாவை நடத்தாதது படக்குழுவிற்கு சற்று வருத்தமாம்.