புலியிடம் சிக்கிய குழந்தை... கடைசியில் என்னவாகியிருக்கும்?...

என்னதான் ஐந்தறிவு ஜீவன்களை செல்லப் பிராணிகளாக வளர்த்தாலும் அவற்றுக்கு பசி எடுக்கும்போதோ அல்லது கோபம் ஏற்படும்போது தன்னை வளர்த்தவன் என்று கூட பார்க்காமல் ஒரு கை பார்த்துவிடும்.

இதன் காரணமாகவே மிருகக்காட்சிச் சாலைகளில் அனைத்து விலங்குகளும் பொதுவாக கூண்டிலேயே அடைக்கப்பட்டிருக்கும். இப்படியிருக்கையில் புலியை சர்வ சாதாரணமாக வைத்திருப்பது சாத்தியமா? ஆம், அவ்வாறு வைத்திருந்தமையால் ஏற்பட்ட கொடூர சம்பவத்தையே இங்கு பார்க்கப்போகின்றீர்கள்.

சவுதி அரேபியாவிலுள்ள மிருகக்காட்சி சாலை ஒன்றிற்கு விஜயம் செய்த குழந்தைகளுக்கு புலியை அவர்களுக்கு அண்மையில் நடமாடச் செய்து வித்தை காண்பிக்கின்றார் அதனை பராமரிப்பவர். புலியும் சற்று நேரம் சாதுவாக திரிந்துவிட்டு குழந்தைகளை வேட்டையாட நினைக்கின்றது. இறுதியில் புலியின் கோரப் பாய்ச்சலுக்கு இலக்காகின்றார் அண்மையில் இருந்த சிறுமி. எனினும் புலியை பராமரிப்பவரின் விரைவான செயற்பாட்டினால் சிறு காயங்களுடன் சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.