ஹன்சிகா, த்ரிஷா இவர்களுக்கு இப்படி ஒரு நிலைமையா?

கோலிவுட்டின் முன்னணி நடிகைகளான த்ரிஷா மற்றும் ஹன்சிகாவின் மொபைல் போன்களை மர்ம நபர்கள் ஹேக் செய்துவிட்டதாகவும், இதன் காரணமாக அவர்களது மொபைல்போனில் இருந்த காண்டாக்ட் நம்பர்கள் அனைத்தும் அழிந்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த தகவலை த்ரிஷா தன்னுடைய டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். ‘என் மொபைல் எண் அறிந்த நண்பர்களே, வாட்ஸ்ஆப் மூலம் உங்களது பெயரை போட்டு எனக்கு ஒரு மெஸேஜ் அனுப்பிவிடுங்கள். ஏதோ, வேலை இல்லாத ஒரு கோழையால் என் மொபைல் ஃபோன் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதனால், அதிலிருக்கும் அனைத்து தொடர்பு எண்களும் அழிந்துவிட்டன.’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த டுவீட்டை ரீடுவீட் செய்த ஹன்சிகா, ‘இதே பிரச்சனை எனக்கும் ஏற்பட்டுள்ளது. தயவு செய்து எனது மொபைல் காண்டாக்டில் உள்ளவர்கள் வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்யவும் என்று கேட்டு கொண்டுள்ளார்.