பப்பாளி விதையினால் இவ்வளவு நன்மைகள் உண்டா?

பப்பாளி பழம் சாப்பிடும் போது பொதுவாக நாம் விதையை கீழே போட்டு விடுகிறோம். ஆனால், அப்படி கீழே போடும் பப்பாளி விதையில் தான் அதிகமான நன்மைகள் இருக்கின்றன. பப்பாளி விதையினால் கல்லீரல், குடல் புழுக்கள் மற்றும் டெங்கு போன்ற  நோய்கள் தொடர்பான வியாதிகளும் குணமடைகின்றன.

பப்பாளி விதை குணப்படுத்தும் நோய்கள்:

கல்லீரல்:

பப்பாளி விதையில் உயிர்ச் சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதனால் கல்லீரலில் இழைநார் வளர்ச்சி குணமடைய இந்த பப்பாளி விதை மிகவும் உதவியாக இருக்கும்.

5 – 6 பப்பாளி விதைகளை அரைத்து உணவாக அல்லது சாறாக எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி தொடர்ச்சியாக 30 நாட்கள்  செய்தால் கல்லீரலில் நோய் வருவதை தடுக்கலாம்.

சிறுநீரகம் ஆரோக்கியம்:

சிறுநீரகம் ஆரோக்கியமாகவும் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பைத் தடுக்கவும் பப்பாளி விதை  மிகவும் உதவியாக இருக்கிறது என்று கராச்சி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்  கூறுகிறார்கள்.  அதுமட்டுமல்லாது, சிறுநீரக நச்சு தொடர்பான நோய்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது என்றும்  கூறுகிறார்கள்.

அழற்சி எதிர்ப்பு பண்புகள்:

பப்பாளி விதை வலி, தோல்  சிவத்தல், கீழ்வாதம், மூட்டு நோய்,  வீக்கம் மற்றும் அழற்சி போன்றவற்றுக்கு பெரிதும் நன்மை அளிக்கும் விதையாக இருக்கிறது.

பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள்:

சிறிதளவு பாப்பாளி விதை  E. coli, Staph, and Salmonella போன்ற பாக்டீரியாவை கொள்கிறது என்று கண்டறிந்துள்ளனர்.  டெங்கு, டைபாய்டு போன்ற வைரஸ் நோய் தொற்றுகளையும் குணப்படுத்த உதவுகிறது. நைஜீரியாவில், பப்பாளி விதை பால் கொண்டு குடிப்பதால் டைபாய்டு காய்ச்சலுக்கு சிறந்த மருந்தாக இருந்து வருகிறது .  டெங்கு காய்ச்சலுக்கு  எதிராக போராடும் கோஸ்டா ரிகா  இந்த பப்பாளி விதையில் இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

புற்றுநோய் வராமல் தடுக்கிறது:

புற்றுநோய் உயிரணுக்கள் மற்றும் கட்டிகள் வளர்ச்சியை பப்பாளி விதைகள்  தடுக்கின்றன. இந்த விதையில் isothiocyanate அடங்கியுள்ளதால் மார்பகம், நுரையீரல் போன்றவை நன்றாக வேலை செய்யும் என்று கூறுகிறார்கள்.