கொழும்பில் தமிழ் மக்கள் பேரவையின் ஊடகவியலாளர் மாநாடு (Photos)

அனைத்து ஊடக தலைவர்கள், செய்தி தயாரிப்பாளர்கள், செய்தி ஆசிரியர்கள், பத்திரிகை செய்தியாளர் மாநாடு 

தமிழ் மக்கள் பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்ட 'வடக்கு தெற்கிற்கான உரையாடல்'

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் சிவில் பிரதிநிதிகளையும் கல்வி மான்களையும் அரசியல் தலைவர்களையும் உள்ளடக்கியதான தமிழ் மக்கள் பேரவை எனும் அமைப்பு,

கடந்த 24.09.2016 இல்“எழுக தமிழ்” என்ற நிகழ்வொன்றை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்து அதில் வடக்கு கிழக்கு மக்களின் அன்றாட மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி நடைபெற்ற ஊர்வலம் மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது யாவரும் அறிந்ததே.

இப் பேரணியானது தென் பகுதியில் உள்ள குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் பலதரப்பட்ட கருத்துக்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகி இருப்பதால் “எழுக தமிழ்” பேரணியில் முன்வைக்கப்பட்ட பிரச்சனைகளையும் தேவைப்பாடுகளையும் தென் பகுதியில் உள்ள மக்களுக்கு தெளிவுபடுத்துவதும் சிங்கள தமிழ் மக்களுக்கிடையில் ஆரோக்கியமானதொரு உறவைப் பேணுவதும் எமது கடைமையாகும்.

அந்த அடிப்படையில் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்கள் இணைந்து ஊடகவியலாளர் மாநாடொன்றை கொழும்பு – 07 ரொறிங்டன் சதுக்கத்தில் அமைந்துள்ள இலங்கை மன்றக்கல்லூரியில் நாளை செவ்வாய் கிழமை 22.11.2016 பிற்பகல் 04.00 மணி தொடக்கம் 06.00 மணிவரை நடாத்தவுள்ளோம்.

இந்த மாநாட்டில் உங்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பதுடன் இந்த மாநாட்டின் முழுமையான நிகழ்வுகளையும் வெளியிடப்படவிருக்கும் கருத்துக்களையும் உங்கள் பத்திரிகைகளில் பிரசுரிக்க நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி

திரு. பூ.லக்ஷமன் (இருதய வைத்திய நிபுணர்)

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் (கௌரவ வடமாகாண முதல்வர்)

திரு.த.வசந்தராசா (கிழக்கு மாகாணம்)

-இணைத்தலைவர்கள் தமிழ் மக்கள் பேரவை-

என்று தமிழ் மக்கள் பேரவை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.