கிளி. முறிகண்டியில் வீதியை ஊடறுத்து காட்டாறு வெள்ளம் (Photos)

தொடர்ச்சியாக பெய்துவரும் மழையையடுத்து நாட்டின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

கிளிநொச்சி மாவட்டம் திருமுறிகண்டியில் பிரதான வீதியை ஊடறுத்து வெள்ளம் பாய்ந்து கொண்டிருப்பதால் போக்குவரத்துகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. 

வீதியை அரித்து உடைத்துக்கொண்டு வெள்ளம் பாய்ந்து கொண்டிருக்கின்றது. போக்குவரத்துகளை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்களையும், ஆபத்துகளையும் பொதுமக்கள் எதிர்கொண்டுள்ளனர்.