யாழில் உரப்பையினுள் மண் மீட்புப் போராட்டம் தொடங்கியது! அதிர்ச்சியில் பொலிசார்!!

வடமராட்சி துன்னாலைப் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபடும் மணல் கொள்ளையர்கள் புதிய யுக்தியைக் கண்டு பிடித்து மணல் கொள்ளையில் ஈடுபடுவதால் பொலிசார் அதிர்ச்சியடைந்து தற்போது அதனைத் தடுக்க விரைந்துள்ளனர். நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரியின் கிடுக்குப் பிடியால் மணல் கொள்ளையர்களின் அட்டகாசம் அடங்கியது. இருந்தும் தற்போது புதிய யுக்தியைக் கண்டு பிடித்து அவர்கள் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக நெல்லியடிப் பொலிசாருக்கு மீண்டும் தகவல் கிடைத்துள்ளது.

அதாவது உரப் பைகளில் மண்ணை நிரப்பி மோட்டார் சைக்கிள்கள் மூலம் இரு பைகளாகக் கடத்திக் கொண்டு வந்து 60 பைகள் அங்கிய தொகுதியை ஒரு லோட்டாக விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளார்கள் மணல் கொள்ளையர்கள். இதனை அறிந்த பொலிசார் தற்போது மோட்டார் சைக்கிள்களில் மண் கொள்ளையில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக விரைந்துள்ளனர்.

மண் மீட்புப் போரில் ஈடுபட்டு உலகநாடுகளுக்கு தமிழர்களின் வீரத்தை அறிய வைத்த எமது பிரதேசத்தில் தற்போது உரப்பையில் மண் மீட்புப் போரை ஆரம்பித்துள்ள கொள்ளையர்களை என்னவென்று சொல்வது?