எல்லா கேள்விக்கும் 'தெரியாது தெரியாது' என்று பதில் சொன்ன மாணவி (Photos)

கல்லணையை கட்டிய கரிகாலனை தெரியாது...

மிக பெரிய போர் வீரன் சோழனை தெரியாது...

முதல் சுதந்திர போராட்ட வீரன் புலித்தேவனை தெரியாது...

முதல் சுதந்திர போராட்ட வீரமங்கை வேலுநாச்சியாரை தெரியாது...

குல தெய்வ கோவிலை காக்க தூக்கு கயிறு ஏறிய மரு திருவரை தெரியாது ...

முதல் தற்கொலை படை தாக்குதல் நடத்திய வீரப்பெண் குயிலியை தெரியாது...

டச்சு படையை வென்ற குமரி வர்மக்கலை ஆசான் அனந்தபத்மனாபனை தெரியாது...

ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை முதன் முதலில் கூறிய செண்பகராமனை தெரியாது ...

ஜெர்மனியில் இருந்து வெடிகுண்டுகளை கப்பலில் கடத்தி வந்த நீலகண்டபிரமச்சாரியை தெரியாது.....

ஆங்கிலேய கலெக்டரை நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொன்ற வாஞ்சியை தெரியாது...

வெள்ளையனை எதிர்த்து வணிகம் செய்த ஒரே சுதந்திர போராட்ட தியாகி சிதம்பரனார் தெரியாது...

இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்களே. இவர்களை போல இன்னும் பல லட்சக்கணக்கான பெயர்கள் உள்ளன.

அவர்கள் யாரையும் இன்றைய பள்ளி குழந்தைகளுக்கு தெரியவைப்பதற்கான எந்த வேலைகளும் இன்றைக்கு எந்த பாடசாலைகளிலும், கல்லூரிகளிலும், கல்வி நிலையங்களிலும்  கிடையாது.

போராட்டகுணங்களை மழுங்கடித்து எல்லாவற்றையும் ஏற்று பழகி கொள்ளும் ஒரு தலைமுறையை உருவாக்கி வரும் பெற்றோர்களுக்கு பாராட்டுக்கள்.

இவற்றை தெரியபடாமல் வைத்து வரலாற்றை அழிப்பதே இன்றைய கட்சிகள் செய்த சாதனை.

அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் நம் தமிழனின் வரலாற்றை சொல்லிக்கொடுக்க தயங்கி வரலாற்றை அழித்து விடுங்கள். இதுவே இந்த செய்தியை படிக்கும் நீங்கள் செய்யும் சாதனையாக இருக்கட்டும்.

20ஆயிரம் வருடங்களுக்கு முன் தோன்றிய எம் தமிழ் மொழியை இந்த 20 வருடங்களில் அழித்த பெருமை நம்மையே சேரும்!!!

நன்றி: பார்த்தி