யாழ். சாவகச்சேரியில் மாமனிதர் ரவிராஜின் உருவ சிலை திறப்பு (Photos)

யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜ் அவர்களுக்கு யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் (தென்மராட்சி பிரதேச செயலகத்துக்கு முன்பாக) இன்று 20.11.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணியளவில், உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ரவிராஜ் எம்.பி படுகொலை செய்யப்பட்டிருந்தார். 

மாமனிதர் ரவிராஜ் அவர்களின் பத்தாம் வருட நினைவு நாளை முன்னிட்டு... குடும்பத்தினரின் பங்குபற்றுதலோடும், பலதரப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொது மக்களின் பங்குபற்றுதலோடும் இன்று இந்த நிகழ்வு நடைபெற்றது.