கிட்டு பூங்காவில் மரக்கன்று வாங்கச்சென்றவர் மயங்கி விழுந்தார் (Video)

வடக்கு மாகாண விவசாய அமைச்சால் கார்த்திகை மாதம் மரநடுகை மாதமாக அறிவிக்கப்பட்டு ‘சொந்த மண் சொந்த மரங்கள்’ எனும் விருப்பத்தோடு ஆங்காங்கே மரங்கள் நடும் நல்ல காரியங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதற்காக மட்டும் அமைச்சர் ஐங்கரநேசனுக்கு ஒரு ‘சல்யூட்’ அடிக்கலாம்.  

இதன் ஒரு பகுதியாக கார்த்திகை ஐந்து முதல் பதினொன்று வரை யாழ்ப்பாணம் நல்லூர் கிட்டு பூங்காவில் மலர்க்கண்காட்சி நடத்தப்பட்டது. 

அங்கு விற்கப்பட்ட பயன்தரும் மரங்கள், அழகு பூங்கன்றுகளை வாங்கச்சென்ற சுன்னாகம் வாசி ஒருவர் மயங்கி விழுந்துள்ளார். காரணம், அங்கு விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த ‘பெஞ்சமினா’ எனும் பூங்கன்றின் விலையே காரணம் ஆகும். 

‘பெஞ்சமினா’ ஒன்றின் விலை முப்பத்து ஐயாயிரம் (35,000) ரூபாய்கள். விலையைக் கேட்டதும் அவருக்கு ‘காட்அட்டாக்' வந்திருக்க வேண்டும் போல.  

இந்தப் பெரிய விலை கொடுத்து முழங்காலின் கீழ் மட்டத்துக்கு நிற்கும் அழகுக்காக மட்டும் பூங்கன்றுகளை வாங்குபவர்கள்...

தலைக்கு மேலே எழுந்து நின்று நிழல் தந்து, தலைமுறை தலைமுறையாக பயன்தரப்போகும் - உடலுக்கு ஆரோக்கியம் பயக்கும், ரூபாய் 25 க்கும் 50 க்கும் 100 க்கும் விற்கப்படும் மா, பலா, தோடை, தேசி, கஜீ, கொய்யா, ஜம்பு, மாதுளை பழ மரக்கன்றுகளை வாங்கி நாட்டுவதில் ஆர்வம் இன்றி பின்னடிப்பதும், இரசாயன மருந்துகள் தெளிக்கப்பட்ட பழங்களை பூட் சிட்டியில் முந்திக் கொண்டு வாங்கிச் சாப்பிடுவதும் ஏனோ? 

எல்லாம் இந்த ‘பேஸன் ஸோ மோகம்’ செய்யும் பசப்பு வாழ்க்கை பித்தலாட்டம் தானுங்கோ…