யாழ். கடற்பரப்பில் 11 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த இந்திய மீனவர்கள் 11 பேர் கைதுசெய்யப்பட்டு, யாழ் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

குறித்த இந்திய மீனவர்கள் காரைநகர் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இவர்கள் பயணித்த இரண்டு படகுகள் உள்ளிட்ட பொருட்கள், இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் அனைவரையும், யாழ் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்று, யாழ் நீரியல் வளத்திணைக்க உதவிப் பணிப்பாளர் ரமேஸ்கண்ணா தெரிவித்தார். 

குறித்த மீனவர்கள் தமழகத்தின் ஜெகதாப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்தமை தெரியவந்துள்ளது.