யாழ்ப்பாணத்தில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது (Photos)

யாழ்ப்பாணம் மணியம்தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா செடி வளர்த்த நபர் ஒருவரை நேற்று 19.11.2016 சனிக்கிழமை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து குறித்த வீட்டினை சோதனையிட்ட காவல்துறையினர் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ததுடன் கஞ்சாச் செடியினையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 2ஆம் குறுக்குத்தெரு மணியம்தோட்டம் யாழ்ப்பாணம் எனும் முகவரியில் உள்ள 32 வயதான மாயகிருஷ்ணன் ராஜேந்திரன் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

செய்திக்கு வாசகர் ரியாக்ஸன்:

வடக்கு மாகாணசபையின் "மரநடுகை மாதம்" எண்டத தப்பா புரிஞ்சிட்டாங்கள் போல கிடக்கு.

"வீட்டுக்கொரு மரம் நடுவோம்" எண்டதை எங்கட ஆக்கள் புரிஞ்சுகொண்ட விதத்தை நினைக்க புல்லரிக்குது.

ஆனால் அதை விட பெரும் நகைச்சுவை என்னண்டா...

இந்தப்படத்தை வடிவாப்பாருங்கோ. ஊசி, உலக்கை பகிடி நினைவுக்கு வரும்.

நன்றி: தமிழ்ப்பொடியன்