சர்வதேச ஆண்கள் தினம் இன்று: பேஸ்புக்கில் வெளியான கலக்கல் பதிவுகள்

இன்று ஆண்கள் தினம்.... மகனாய், சகோதரனாய், கணவனாய், தந்தையாய் தாத்தாவாய் உருவெடுக்கும் ஒவ்வொரு உருவிலும் அவனுக்குத்தான் எத்தனை கடமைகள்.. 

இந்த சமூகம் பெண்ணை விட ஆணுக்கு அதிக பொறுப்புகளை தந்துவிட்டிருக்கிறது... ஒரு குறிப்பிட்ட வயதில் வேலைக்குச் சென்றே ஆகவேண்டும் என்ற நிலையிலிருந்து அவனுடைய பொறுப்புகள் ஆரம்பமாகிறது.. இதற்கிடையில் ஒரு பெண்ணைப்பார்த்துக் காதலிக்கவோ கல்யாணமோ செய்ய வேண்டும்.. குழந்தைகள் பெற வேண்டும், அவர்களுக்குக் கல்வி உள்ளிட்ட நல்ல வாழ்க்கை அமைத்துத்தரவேண்டும். 

ஆண்மை என்பது பிள்ளைகளுக்குத் தந்தையாவது என்பதைத்தாண்டி, மற்ற உயிரினங்களில் பெண்மை செய்யும் குடும்பத்தைக்காத்தல் என்ற அடைகாக்கும் வேலையும் மனித சமூகத்தில் ஆணுக்கே (பெரும்பாலும்) விதிக்கப்படுகிறது. ஒருபெண் பிறரைச் சார்ந்து வாழ்வது போல ஓர் ஆனால் வாழமுடிவதில்லை.. 

மற்ற உயிரினங்களில் எல்லாம் குடும்பத்தைக்காக்கும் கடமை பெண்ணினத்திற்கே உண்டு.. ஆண்சிங்கம், ஆண் புலி போன்றவை வேட்டையாடுவது கூட இல்லை...இது மரபின் காரணமாகவோ சமூகத்தில் கட்டமைக்கப்பட்ட விதியாகவோ இருக்கலாம்.. 

ஆனால் ஆணுக்கும் சிலவற்றில் சுதந்திரம் மறுக்கப்படுகிறது என்பது உண்மை.... ஆண் அழக்கூடாது என்பதுமுதல் ஆணின் மனக்குமுறல்கள் அடக்கி வைக்கப்படுகின்றன.. இதையெல்லாம் தாண்டி தன் கடமைகளை செவ்வனே முடித்து அழாத மாதிரியே நடிச்சிக்கிட்டு, முகநூலில் எல்லாவற்றுக்கும் போராடி, பல்பு வாங்கினாலும் மற்றவங்களை சிரிக்க அழுக, சிந்திக்க எரிச்சல் பட வைக்கிற கண்ட கண்ட பதிவுகளை அசராமல போட்டுக்கிட்டு இன்பாக்ஸில் இம்சைகள் கொடுத்து, எப்போதும் போல சிரிச்சிக்கிட்டே ஒன்னுமே நடக்கலையே என்ற மொமண்டில் வீறுநடை போடும் ஆண்கள், அனைவருக்கும் எனது இனிய ஆண்கள் தினவாழ்த்துகள்...

நன்றி: பார்வதி