அதிக வேகம் எடுத்த வெங்கடேஸ்வராவின் பரிதாப நிலை? (Photos)

கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த வெங்கடேஸ்வரா தனியார் சொகுசு பேருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இன்று 19.11.2016 சனிக்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் வவுனியா புளியங்குளம் பிரதேசத்தில் ஏ9 நெடுஞ்சாலையில் இந்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பொதுவாக கொழும்பிலிருந்து இரவு 7.00 – 8.00 மணிக்குள் புறப்படும் பேருந்துகள் அதிகாலை 3.00 – 4.00 க்கும் இடைப்பட்ட நேரத்தில் வவுனியாவைக் கடப்பதே வழமையானது.

ஆனால் வெங்கடேஸ்வரா தனியார் சொகுசு பேருந்து 2.00 மணிக்கே புளியங்குளத்துக்கு வந்து விட்டது என்றால், அது எந்தளவு வேகத்தில் பயணித்திருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.

தற்போது மழைக்காலம். நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்துகொண்டிருப்பதுடன் எங்கும் புகை மண்டலமாகவும் காட்சியளிக்கின்றது. 

அத்தோடு பாதைகளை ஊடறுத்து சில பகுதிகளில் மழை நீர் வெள்ளமும் பாய்ந்து கொண்டிருக்கின்றது. பாதைகளும் சறுக்கும் வழுக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. 

எனவே பயணிகளின் உயிர் பாதுகாப்பை கவனத்தில் கொண்டாவது சாரதிகள் நிதானத்தை கடைப்பிடித்து பொறுமையாக வாகனத்தை செலுத்த வேண்டும் என்பதும், தமது ‘ஓவர் ஸ்பீட்’ சாகசத்தை பயணிகளின் மரண வீட்டில் கொண்டு போய் முடிக்க வேண்டாம் என்பதுமே எமது வேண்டுகோள்கள் ஆகும்.