யாழ்ப்பாணத்தில் கிளை விட்டு வளரும் அதிசய தென்னை (Video)

சாதாரண மரங்கள் கிளை விட்டு வளர்வது தான் வழமையானது. ஆனால், தென்னை மரங்கள் கிளை விட்டு வளர்வது தான் வேடிக்கையானது. 

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசத்தின் கிட்டுப் பூங்காவுக்கு எதிரே உள்ள தனியார் காணியொன்றிலேயே இந்த அதிசய தென்னை மரத்தை பார்க்க முடிகின்றது. 

நான்கு கிளைகள் விட்டு கடந்த 25 வருடங்களுக்கு மேலாக அப்பகுதியில் குறித்த தென்னை மரம் காணப்படுகின்றது. 

இந்த மரத்தின் பாளைகளும் வழமையான தென்னை மரங்களின் பாளைகளை விட நீளமாக காணப்படுகின்றன. 

எமது மண்ணில் அபூர்வமாக வளர்ந்துள்ள இந்த தென்னையை பாதுகாக்குமா வடக்கு மாகாண விவசாய அமைச்சு? இல்லை ‘கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை’ என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் திட்டு வாங்குவாரா அமைச்சர் ஐங்கரநேசன்?