யாழ் நீதிபதியில் வீட்டுக் காணிக்குள்ளேயே இந்த நிலை என்றால்?

யாழ்மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றனர் நீதிபதிகள்.

அந்த வகையில் யாழ் நீதிமன்ற நீதிபதியாக இருந்து தற்போது பருத்தித்துறை நீதிபதியாகப் பொறுப்பேற்றிருக்கும் பெ.சிவகுமார் அவர்களும் சட்டம், ஒழுங்கை நிறைவேற்ற தொடர்ச்சியக செயற்பட்டு வருகின்றார். இந் நிலையில் அவரது வீட்டு வளவிற்குள் கைக் குண்டு மீட்கப்பட்டதால் சமூகவிரோதிகள் அவருக்கு அச்சுறுத்தல் விடுவதற்காக செயற்படுகின்றனரா எனப் பலரும் சந்தேகம் கொண்டனர். ஆனால் அவரது வீட்டுக் காணி முன்னர் இராணுவ முகாமாகச் செயற்பட்டு வந்ததாகவும் தற்போது அந்த முகாமிலிருந்து படையினர் விலகிய பின்னர் அது நீதவானிடம் கையளிக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

ஒரு நீதவான் தங்கும் இடம் கையளிக்கப்படும் போது அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்காது இருந்தது எந்த அளவுக்கு பாரதுாரமான விடயம் என்பது புரிகின்றது. நீதவானின் வீட்டு காணிக்குள் இருந்த குண்டே அகற்றப்படாது இருந்துள்ளது என்றால் சாதாரன பொதுமக்களின் அதுவும் உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் குடியேறியுள்ள பொதுமக்களின் காணிகளுக்குள் இன்னும் வெடி பொருட்கள் இருக்கும் என்பது அப்பட்டமான உண்மையாகும். வெடி பொருட்களை அகற்றும் நிறுவனங்கள் அசமந்த போக்காக கவலையீனமாகச் செயற்படுகின்றனவா என்பது சந்தேகப்பட வேண்டியுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் இனியும் இடம்பெறாத வண்ணம் பொறுப்புடன் செயற்பட வேண்டியது வெடி பொருட்களுடன் தொடர்புடைய,சம்மந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளினதும் கடமையாகும்.