விடுதலைப்புலிகளின் 25 வருட கால ஆவணம் சிக்கியது (Photos)

யாழ்ப்பாணத்தில் இப்போதுள்ள வாண்டுகள் - கொசுறுகள் பலருக்கும், 2002ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் நடைமுறைப்படுத்திய இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு பயணம் செய்வதற்கான போக்குவரத்து அட்டை (பாஸ்) நடைமுறையே தெரிந்திருக்க வாய்ப்புண்டு.

ஆனால் இங்கு நியூஜவ்னா.கொம் பதிவேற்றியுள்ள பயண அனுமதி அட்டைகள், 25 வருடங்களுக்கு முன்னர் 1992ம் ஆண்டு விடுதலைப்புலிகளால் வழங்கப்பட்ட பயண அனுமதி அட்டைகள். 

அன்று விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டு பிரதேசமான யாழ்ப்பாணத்திலிருந்து கடமைக்காக வவுனியா மாவட்டத்துக்கு செல்ல வேண்டிய அரசாங்க அலுவலர்கள், கிலாலி கடல் வழி ஊடாக படகில் கிளி.பூநகரிக்கு பயணம் செய்து அங்கிருந்து வவுனியாவுக்கு செல்ல வேண்டியிருந்தது. அப்போது வழங்கப்பட்ட பயண அனுமதி அட்டைகளே இவை.   

இன்றைக்கு இந்த பயண அனுமதி அட்டைகள் வெள்ளிவிழாவும் (25 ஆண்டுகள்) கண்டு விட்டன. இன்றைக்கும் இவற்றை பொக்கிசமாக ஒருவர் பாதுகாத்து வருவதோடு, அந்த கால வாழ்க்கையை பசுமையான நினைவுகளாகவும் எம்முடன் பகிர்ந்து கொண்டார். 

‘விடுதலைப்புலிகள் பாஸ் நடைமுறையை கடைப்பிடித்து மக்களை துன்புறுத்தினர்’ என்று வாய் கிழிய காட்டுக்கூச்சல் கத்துபவர்களுக்கு, மக்களாலேயே விரும்பப்பட்டு ஒரு வரலாற்று ஆவணமாக இன்றும் கூட பாதுகாத்து வரப்படும் இத்தகைய பயண அனுமதி அட்டைகள் செம சாட்டையடி!