யாழ்ப்பாணத்தாரின் தலையணைகளில் இருந்து வரும் அந்த 'பழைய ஊத்தை' நாற்றம் (Photos)

சுத்தம் செல்வம் தரும்!

இரண்டு அல்லது மூண்டு வாளி தண்ணியை எட்ட நிண்டு சடாா் சடாா் எண்டு ஊத்தி விடுவது... எங்கடை ஆக்கள் பெரும்பாலும் கழிவறை கழுவுவது இப்பிடித்தான்.

எங்கடை ஆக்கள் பென்னாம் பெரிய வீடுகள் கட்டடி தரைக்கு மாபிள் கல்லுகளும் பதிச்சு வைச்சிருப்பினம். ஆனால், அவையின்டை டொய்லெட்டுக்குள்ள போனால்... பெரும்பாலும் கால் வைக்கக் கூசும்.

உண்மையில் இந்த மாதிரி டொய்லெட்டுகளை விட பனங்காணிக்குள் மண்வெட்டியாலை வெட்டிப் போட்டு இருந்திட்டு மூடிப் போட்டு வாற பழைய சிஸ்டம் எவ்வளவோ சுத்தமானது. ஆரோக்கியமானது.

வெள்ளைக்காரனிட்டை இருந்து லொய்லெட் முறையை கற்றுக் கொண்ட எங்கடை சமூகம்:

சுத்தம், சுத்திகரிப்பு, சுகாதரத் தொழிற்துறையின் அத்தியாவசியம்...

சகாதாரத் தொழிலாளர்களின் முக்கியத்துவம்...

சுகாதாரத் தொழிளாா்களின் உரிமைகள்...

சகாதாரத் தொழிலாளுக்கான கௌரவம்...

சுகாதாரத் தொழிலாா்களின் பாதுகாப்பு...

போன்ற அட்வான்சான மனோபாவங்களை கற்றுக் கொள்ளாததின் விளைவுதான் இன்று,

யாழ்ப்பாண டவுனில் உள்ள நடுத்தர வகை சாப்பாட்டுக் கடைகளின் குசுனிப் பக்கம் போனவா்கள், அதுக்குப் பிறகு அங்கு சாப்பிட முடியாத நிலை.

மாறிச்சாறி அந்தச் சாப்பாட்டுக் கடைகளின் கழிவறைக்குச் செல்ல வேண்டி வந்தால் சாப்பிட்ட சாப்பாடு வாந்தியாகவே வரவேண்டிய நிலை.

யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் நவீன தர கழிப்பறைகள் இருந்தும் மூக்கைப் பொத்தியபடி ஒண்டுக்கிருந்துவிட்டு ஓடி வரவேண்டிய நிலை.

யாழ்ப்பாணத்தில் உள்ள எங்கடை ஆக்களின் நட்சத்திர ஹோட்டல்களில் படுக்கை விரிப்புகள், தலையணிகளில் ஒரு ”பழைய” நாத்தமும், கட்டில் மேசைகளுக்குக் கீழ் தூசுகளும், அறைகளுக்குள் தூசு மணமும் இருக்க வேண்டிய நிலை.

வெளிநாட்டில் இருந்து வரும் எங்கடை இரண்டாவது தலைமுறைப் பிள்ளைகள் யாழ்ப்பாணத்தில் உள்ள ஹோட்டல்களில் தங்குவதை விட கொழும்பில் வந்து தங்குவதையே அதிகம் விரும்புகின்ற நிலை.

யாழ்ப்பாணத்துக்கான சுற்றுலாத்துறை வருமான வாய்ப்புகள் தென்னிலங்கை மற்றும் பல்தேசிய கம்பனிகளால் விழுங்கப்படப் போகும் நிலை.

ஏற்கனவே Jet Wing Hotel எங்கடை ஆக்களின் ஹோட்டல் வருமானத்துக்கு ஆப்பு வைக்கத் தொடங்கிவிட்டது.

முக்கிய காரணம் எங்கடை ஆக்களுக்கு ”சுத்தம்” சாா்ந்து இருக்கிற அலட்சியப் போக்கு...

சுகாதாரத் தொழிலாளா்கள் மீதான இழக்காரம்...

சுகாதாரத் தொழிலாளா்கள் மீதான அதிகாரப் போக்கு...

சுகாதாரத் தொழிலாளா்கள் சாா்ந்து கடைப்பிடிக்கிற மனிதாபிமானம் அற்ற மனோபாவம்...

சில வருடங்களுக்கு முன்னம் நான் தற்செயலாக ஒரு செமினாரில் பங்குபெறும் வாய்ப்புக் கிடைத்தது. அது என்ன செமினாாா் எண்ணடால்,

”பணக்காரராக வருவது எப்படி?”

இந்தியாவில் இருந்து வந்த ஒரு பிரபல்யமான Motivation Trainer அதை நடாத்தினாா். அவரின் பெயா் மறந்து போச்சுது.

பணக்காரராக வர அவா் சொன்ன முக்கிய இரகசியம்...

Be Clean! சுத்தமாக இரு!

சிங்கப்பூர் அப்பிடித்தான் பணக்கார நாடா வந்திச்சாம். சுவிஸ் நாடும் அப்பிடித்தானாம்.... அப்பிடி ஏராளமான உதாரணம் சொன்னாா்.

எனவே, யாழ்ப்பாணம் செல்வச் செழிப்பான இடமா வர வேணுமெண்டால் சுத்தம் முக்கியம்.

சுத்தமா இருக்க வேணுமெண்டால் சுகாதாரத் தொழிலாளா்கள் மதிக்கப்பட வேண்டும். அவா்களுக்கு போதிய சம்பளம் வேணும். போதிய பாதுகாப்பு வேணும்.

அதுக்காக, யாழ்ப்பாணம் ”சுகாதாரத் தொழிலாளா்களின்” போராட்டத்துக்கு ஆதரவு கொடுங்கள்.

நன்றி: ஞா.காசிநாதர்