மிஸ்டர் கேக் வெட்டி மெதமுலனவில் பிறந்தநாள் கொண்டாடிய மஹிந்த (Video)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று தனது 71 ஆவது பிறந்த தினத்தை விமரிசையாக கொண்டாடுகிறார். 

மஹிந்தவின் பிறந்த நாளை முன்னிட்டு மத வழிபாடுகள் மற்றும் தானம் வழங்கும் பல நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்மைய இன்று காலை மெதமுலன மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது.

அத்துடன் MR என பெயரிடப்பட்ட கேக் ஒன்றை வெட்டி தனது பிறந்த நாளை மஹிந்த ராஜபக்ச கொண்டாடியுள்ளார்.

இதேவேளை, இணையத்தளம் ஒன்றையும் அவர் அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளார். 

அத்துடன் அவர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் குடும்ப உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

தனது பிறந்த நாளான இன்று அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சில முடிவுகளை எடுக்கப் போவதாக மஹிந்த அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.