வளிமண்டலக் குழப்ப நிலையால்: மழை தொடரும்!- கடலும் கொந்தளிக்குமாம்

வளிமண்டலக் குழப்ப நிலையால் மழைக் காலநிலை தொடரும் என்றும், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பு கொந்தளிப்பாக மாறும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பு கொந்தளிப்பானதாக மாறக்கூடிய சாத்தியம் உள்ளதால், கடலோடிகள் அவதானமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை அதிக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும், கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும், இடிமின்னல் ஏற்படும் நேரங்களில் அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.