தமிழ் தேசியக்கூட்டமைப்பு தங்களிடம் தருமாறு அடம்பிடிக்கும் ‘தல்செவன’ உல்லாச ஹோட்டல்! (Video)

‘வடக்கு கிழக்கின் சமகால பிரச்சினைகள் - அங்குள்ள மக்களின் உடனடித் தேவைகள்’ தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் - பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூடிக்கலந்தாலோசித்து தீர்வு காண தமிழ் தேசியக்கூட்டமைப்பினரை அழைத்துப் பேசும் போதெல்லாம்,

தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் பேச்சுக்கு இடையே அடிக்கடி 'அந்த ‘தல்செவன’ உல்லாச ஹோட்டலை தாங்கோவன்’ என்று ஜனாதிபதிக்கும் - பிரதமருக்கும் கிக்கிலி மூட்டி கூலாய் வழிந்து பேசுகின்றனராம். அதற்கு ஜனாதிபதியும் - பிரதமரும் ‘பொறுங்கோ… பொறுங்கோ… அவசரப்படாதையுங்கோ…பார்ப்பம்’ என்று சிரித்துக்கொண்டு சொல்லி சமாளித்து அனுப்பி வைப்பார்களாம். 

அப்படி என்ன தான் இருக்கிறது யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் அமைந்துள்ள ‘தல்செவன’ உல்லாச ஹோட்டலில்? வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கோவன்.  

இப்பவெல்லாம் தமிழ் தேசியக்கூட்டமைப்பாருக்கு அடிக்கடி கிளுகிளுப்பு தேவைப்படும் போதெல்லாம், நானூறு கிலோமீற்றர்கள் தூரத்துக்கு அப்பால் உள்ள கொழும்புக்கு பயணம் செய்து ‘கலதாரி உல்லாச ஹோட்டலிலோ அல்லது ஹில்டன் உல்லாச ஹோட்டலிலோ’ தான் ரூம் போட வேண்டியதாக இருக்கு. இது ஒரு பெரிய பிரச்சினை. பயணக்களைப்பு, உடல் அலுப்பு வேற.  

ஆனால் காங்கேசன்துறை பக்கத்தில தானே... ‘தல்செவன’ உல்லாச ஹோட்டலை கொடுத்து விட்டால் நினைச்ச நேரத்துக்கு போய் ரூம் போட்டு விட்டு வந்திடுவினம். 

தயவுசெய்து எங்கள் தமிழ் அரசியல் தலைமைகள் மீது கொஞ்சமாவது இரக்கம் காட்டுங்களேன் ஜனாதிபதி சேர். நீங்களாவது கருணை காட்ட மாட்டீங்களா பிரதமர் சேர்?  

இந்த விசயத்தில் இனியும் எங்கள் எம்.பிக்கள், அமைச்சர்மாரின்ட குஞ்சுகளை அரசு திட்டமிட்டு தண்டித்தால் பெரும் மக்கள் போராட்டம் வெடிக்கும்! அதுவும் காங்கேசன்துறை ‘தல்செவன’ உல்லாச ஹோட்டலுக்கு முன்னால்.