பருத்தித்துறையில் இருந்து கொழும்பு சென்ற பஸ் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ் மீது, இன்று (17) அதிகாலை இனந்தெரியாதோரால் கற்களால் வீசித் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பருத்தித்துறை டிப்போ முகாமையாளர் கே. கந்தசாமி தெரிவித்துள்ளார்.

நெல்லியடி கொடிகாமம் வீதி அணஞ்சிலடியில் வைத்து இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, பஸ்ஸின் பின்பக்கக் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளது.

குறித்த சம்பவத்தினால் பயணிகள் சிரமத்திற்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தையடுத்து, பருத்தித்துறை டிப்போவில் இருந்து மாற்று பஸ்ஸொன்று அனுப்பி வைக்கப்பட்டு, அதில் பயணிகள் பயணத்தை மேற்கொள்ள முடிந்ததாக, முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவத்தின் போது பயணிகளுக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.