பனையை விழுங்கிய ஆலமரம்! யாழ். மாவிட்டபுரத்தில் நிகழ்ந்த ஆச்சரியம் (Video)

யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் வீமன்காமம் கிராமத்தில் ஆலமரம் ஒன்று, பனை மரத்தை ஒண்டிப் பிழைத்து வளர்ந்து வந்த நிலையில், அந்த ஆலமரம் காலப்போக்கில் பனை மரத்தை பற்றிப்பிடித்து, பனை மரத்தை முழுவதுமாக மூடிப்படர்ந்து, தற்போது பனைமரத்தின் வெளிப்புறத்தோலாகவே மாறிப்போயுள்ளது. 

பனை மரத்தின் மொத்த உருவத்தையும் ஆலமரம் தன்னுள் விழுங்கி விட்டது. இதனால் நாலாபுறமும் எத்திசையில் நின்று பார்ப்பினும், பனையின் வெளிப்புற பக்கம் எல்லாம் ‘பாம்புச் சட்டை’ போர்த்தியது போல ஆலமரமே தெரிகின்றது. 

ஆலமரத்தின் கோரப்பிடிக்குள் அகப்பட்டு நெரிப்பட்டு தனது இயல்பை முழுவதுமாக இழந்து விட்ட குறித்த பனை இனி சீவிப்பது கஸ்டம் என்று பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். பெருமளவான வெளியூர் மக்கள் இதனை நேரில் சென்று பார்வையிட்டும் வருகின்றனர். 

தமிழர் நிலத்தில் தற்போது இடம்பெற்றுவரும் சிங்கள ஆக்கிரமிப்புகள், பௌத்தமயமாக்கல்களுக்குள் இடையே தமிழ் மக்களின் சமகால வாழ்வு எப்படி துயரமானது? அவர்கள் நெருக்கடிகளோடு எப்படி வாழ்ந்து வருகின்றனர்? என்பதற்கு இந்த பனை மரத்தை நல்ல உதாரணமாக எடுத்தும் கொள்ளலாம்.