யாழில் ஆசிரியையின் வீட்டில் பட்டப் பகலில் பெரும் கொள்ளை

யாழ்ப்பாணம்,  அச்சுவேலி மேற்கு தென்மூலை பகுதியில் உள்ள ஆசிரியையின் வீட்டை உடைத்து உட்புகுந்த கொள்ளையர்கள் 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான 27 பவுண் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

இச்சம்பவம் நேற்றுப்  புதன்கிழமை பகல் இடம்பெற்றுள்ளது. 

இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.