யாழில் வாள்வெட்டில் துடித்துக் கொண்டு இருந்தவர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம், கல்லுண்டாய் வெளி பிரதேசத்தில் நேற்று 16.11.2016 இரவு 7 மணியளவில்  பாரிய வெட்டுக்காயங்களுடன் வீதியில் துடித்துக்கொண்டிருந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பொலிஸாரினால் மீட்க்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.