வீட்டுக்கு மேலே குழை தள்ளிய வாழை: குடும்பத்தினர் அதிர்ச்சி (Photos)

வழமையாக வீடுகளில் உள்ள நிலங்களிலும், தோட்டக் காணிகளிலும் தான் வாழைச் செய்கை நடைபெறுவதனை நீங்கள் அறிந்திருப்பீர்கள். 

இந்தியாவின் தமிழ்நாட்டின் சென்னையில் கோபாலன் என்ற வயதானவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் உடுப்புத் தோய்க்கும் ரப்பர் வாளியினுள் இயற்கைப் பசளைகளைப் பாவித்து வாழையொன்றினை நடுகை செய்துள்ளார். 

இயற்கை முறையில் பயிர் செய்யப்பட்டுள்ள குறித்த வாழை, வளர்ந்து குலை தள்ளியுள்ளது. 

சின்னக் குலை என்றாலும், இயற்கையான முறையில் கிடைத்த வாழைப்பழங்களை சந்தோசமாக சாப்பிடுகின்றனர் கோபாலன் குடும்பத்தினர். 

நகரத்துல இருக்கிறோம்... ஒன்றுக்கும் இடமில்லை எனப் புலம்புபவர்கள்.... இதனை முயற்சி செய்து பார்க்கலாம். 

இது தவிர, பழைய வாளிகள், சாடியில் நல்ல இயற்கைப் பசளைகளை இட்டு, மிளகாய், வெண்டி, கத்தரி, பாகல், புடோல், பயிற்றை, கீரை வகைகள்  என்று பல பயிர்களையும் இயற்கை முறையில் விளைவித்து அதனை தினம் தோறும் உணவில் பயன்படுத்தி நோய், நொடியின்றி நீண்ட நாட்கள் வாழலாம். 

வீட்டுக்கு மேலே இடமில்லை என்றாலும், வீட்டுக்கு அருகில் உள்ள சிறிய இடங்களையும் இவ்வாறான இயற்கை விவசாயத்துக்கு பயன்படுத்தலாம். 

நன்றி: கோபாலன்-