அனலைதீவு GS இன் அனல் பறக்கும் நடவடிக்கை (Photos)

அன்று அந்த இளம் குடும்பப்பெண், அனலைதீவு GS இடம் போய் தயங்கித் தயங்கி… ‘தன் கணவர் தன்னையும் தன் பிள்ளைகளையும் ஒழுங்காக பராமரிப்பதில்லை என்றும், நித்தமும் குடித்து விட்டு வந்து வன்முறையில் ஈடுபடுவதாகவும், பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகவும்' ஓ... என்று சத்தம் போட்டு அழுதுள்ளார். இப்படி பல குடும்ப பெண்களிடம் இருந்து பல நூறு முறைப்பாடுகள்!!! 

இதனையடுத்து அனலைதீவு தெற்கு ஜே /38 பிரிவு கிராம அலுவலரும், அபிவிருத்தி உத்தியோகத்தரும் இணைந்து எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை கிராம மக்களால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகின்றது. 

குடும்ப பெண்களின் முகத்தில் கண்ணீர்க் கோடுகளுக்கு பதிலாக மகிழ்ச்சிக் கோடு கிழிக்க இப்படி நல்லதொரு நடவடிக்கை! 

இருவருக்கும் நியூஜப்னா.கொம் இன் வாழ்த்துகள். நீங்களும் வாழ்த்துங்கள் உறவுகளே...