யாழ். வல்லிபுரத்தில் இயந்திர கோளாறு காரணமாக தரை இறங்கிய விமானம் (Video)

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பிலிருந்து பலாலி விமானத்தளம் நோக்கிப் புறப்பட்ட விமானம் ஒன்று, இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசர அவசரமாக யாழ்ப்பாணம் வல்லிபுரம் ஆழ்வார் கோவிலுக்கு முன்பாக உள்ள சமவெளியில் தரை இறக்கப்பட்டுள்ளது. 

விமானி புத்திசாதூரியமாக விரைந்து செயற்பட்டதால் அதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் உயிரிழப்புகள் ஏதுமின்றி காப்பாற்றப்பட்டுள்ளனர். 

பிற்குறிப்பு: கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற வல்லிபுரம் ஆழ்வார் கோவில் வருடாந்த உற்சவ திருவிழாவின் போது வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக, ஐஸ்கிறீம் உற்பத்தி நிறுவனம் ஒன்றினால் (வியாபார உத்தியாக) கவர்ச்சியாக வடிவமைக்கப்பட்ட இந்த டூப்பிளிக்கட் (நகல்) விமானம், ஒருமாதம் கடந்தும் அப்புறப்படுத்தப்படாமல் அவ்விடத்திலேயே தற்போதும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.