இளைஞனின் அதிவேகத்தால் அப்பாவி குடும்பஸ்தர் யாழில் பலி!- விதவையான மனைவி (Video)

யாழ்ப்பாணம் நெல்லியடிப் பிரதேசத்தின் கார்கில்ஸ் பூட் சிற்றிக்கு அண்மையில் திருமகள் சோதி வீதிச் சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் வயதான குடும்பஸ்தர்  ஒருவர் தலையில் படுகாயமடைந்து சிகிச்சை பலனளிக்காது மரணமடைந்துள்ளார். 

இவருடன் பயணித்த மனைவி சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். 

துன்னாலை வடக்கைச் சேர்ந்த 67 வயதான கந்தசாமி விபுலானந்தம் என்பவரே மரணமடைந்தவராவார். 

குறித்த வயதான குடும்பஸ்தரும் மனைவியும் நேற்று மாலை 4.45 மணியளவில் மருத்துவ சிகிச்சையொன்றுக்கு சென்றுவிட்டு துன்னாலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது இளைஞர்கள் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளை திடீரென பிரதான வீதியில் இருந்து ஒழுங்கைக்குள்   திருப்பியதால் நிலைகுலைந்த குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிள் அருகில் இருந்த மின்கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது. 

காயமடைந்த குடும்பஸ்தர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமடைந்தார். மேலதிக விசாரணைகளை நெல்லியடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

வீதி ஒழுங்குகளை சரியாக கடைப்பிடிக்காத இளைஞரின் செயலால் அப்பாவி குடும்பஸ்தர் ஒருவர் அநியாயமாக பலியாகியுள்ளார். 

இனி வரும் காலங்களில் ஆவது வீட்டில் பெற்றோரும், புலம்பெயர் வாழ் உறவுகளும் சரி இளைஞர்கள் உரிய வயதுக்கு வரமுன்னர் தயவு செய்து மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுக்காதீர்கள். அவர்களின் அழிவுக்கு நீங்களே அத்திபாரமிட்டு  விடாதீர்கள்.

வலு பக்குவமாக வாகனம் செலுத்தி வந்த வயதான தம்பதிக்கு இந்தப் பொறுக்கிகள் எமனாக அமைந்த காலக் கொடுமையை என்னவென்று சொல்ல?  

தொடர்புடைய செய்தி: 

கலியாணத்தை நிறுத்திய மணப்பெண்: யாழில் சம்பவம் (Video)