வீதியில் நெல் விதைக்கும் மக்கள். இப்படியும் மனிதர்களா? (Video)

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புகழேந்திநகர் கிராமத்தின் உள்வீதிகள் ஏலவே சேதமடைந்திருந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையையடுத்து மேலும் மோசமாக சேதமடைந்து சேறும் சகதியுமாக காணப்படுகின்றன. 

மக்கள் பயணிக்க முடியாத அளவுக்கு சேறும் சகதியுமாக காணப்படும் குறித்த வீதிகள் நெல் விதைப்புக்கு தயார்ப்படுத்தப்பட்ட வயல்கள் போன்று காணப்படுவது மிகவும் துன்பகரமான நிகழ்வாகும். 

சிலவேளைகளில் ‘வாய்த்து விட்டது இது சந்தர்ப்பம்’ என்று இந்த வீதிகளில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், சாந்தி, சாள்ஸ் ஆகியோர் போட்டிப்போட்டுக்கொண்டு வீதியை பங்கிட்டு நெல் விதைப்பில் ஈடுபடவும் கூடும். தனக்கும் பங்கு வேண்டும் என்று மாகாணசபை உறுப்பினர் ரவிகரனும் வரிந்து கட்டிக்கொண்டு சண்டை பிடிக்கக்கூடும். 

இத்தனைக்கும் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் கமலேஸ்வரன் அண்மையில் தான், வெடிகுண்டு பீரங்கி மாவை.சேனாதியின் வாலைப்பிடித்து தொங்கி வடக்கு மாகாணசபையின் பிரதித்தவிசாளர் பதவியை லபக் என்று கைப்பற்றியிருந்தார். 

அவர் இந்த மழைக்குளிருக்கு லண்டனுக்கு மனைவியை நாடி விமானம் ஏறி விட்டாரோ யார் அறிவார்?

ஆனால் பாவப்பட்ட ஏழை எளிய மக்கள் என்ன தான் செய்ய முடியும். சொந்த கிராமத்தில் இந்த அவஸ்தைகளை ஜீரணித்துக்கொண்டு இன்னும் எத்தினை நாளைக்குத் தான் சீவிக்கப் போகின்றார்களோ?