தலதா மாளிகையின் தாக்குதல்! வெளிவரும் சிங்கள திரைப்படம்

சிங்கள பௌத்த மக்களின் புனித தலங்களில் ஒன்றாக போற்றப்படும் ஸ்ரீ தலதா மாளிகை மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு திரைப்படமொன்று உருவாக்கப்பட உள்ளது.

1998ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் திகதி இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

கலாநிதி அரோஸ பெர்னாண்டோ இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளார்.

அரோஸவின் எட்டாவது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

பல விருதுகளை வென்றுள்ள திரைப்பட இயக்குனர் சனத் அபேசேகர இந்தப் படத்தை இயக்க உள்ளார்.

குற்ற விசாரணைப் பிரிவின் ஓய்வு பெற்ற அதிகாரியான சேனக குமாரசிங்கவின் திரைக்கதைப் பிரதியே திரைப்படமாக உருவாக்கப்பட உள்ளது.

பிரபல நடிகர் பாலித சில்வா, சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகராக நடிக்கவுள்ளார்.

ஹொலிவுட் தொழில்நுட்பங்கள் இந்த திரைப்படத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளதாகவும், திரைப்படத்தின் பூஜைகள் இந்த மாதம் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கண்டி, திருகோணமலை மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களில் படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.