மணமகனின் -------- காரணம் காட்டி, கலியாணத்தை நிறுத்திய மணப்பெண்! யாழில் சம்பவம் (Video)

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேலை வெட்டிக்குப் போகாமல், வெளிநாட்டிலிருந்து கொண்டு அண்ணன்மார்கள் அனுப்பும் பணத்தில் வண்டியும் குண்டியும் வளர்த்துக்கொண்டு, அந்த குண்டிக்கு ஹங், பல்ஸர் வகை மோட்டார் சைக்கிள்களும் வாங்கிக்கொண்டு ஊதாரித்தனமாக ஊர் சுற்றும் புறம்போக்கு தம்பிமார்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. 

இதில் கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், வேலை வெட்டிக்குப் போய் வியர்வை சிந்தி உழைக்க வக்கற்றவர்கள், தன்மானத்தோடு வேலைக்குப் போய் வீடு திரும்பும் பெண்களை வீதிகளில் மறித்து பலவந்தமாக 'ஐ லவ் யூ' சொல்வது தான். 

மேலும் அந்த பெண்கள் காதலை ஏற்க மறுத்து விட்டால் அவர்களுடன் வன்முறையில் ஈடுபட்டு ‘நம்பு செல்லம்… நான் உண்மையிலேயே ஆம்பள தான்’ என்று அழாக்குறையாக நிரூபிக்க இவர்கள் படுத்தும்பாடு வைகைப்புயல் வடிவேலு படக் காமெடியை விடவும் பெரிய காமெடி தான்.  

ஆனால், இந்தக் காலத்து யாழ்ப்பாணத்து பொண்ணுகளுக்கு நல்லாவேத் தெரியும் ‘ஒரு பொட்டை - பொண்ணையன்’ வந்து தன்னட்ட ஐ லவ் யூ சொல்றான்? என்பது. ‘உழைச்சு தன்னை ஆம்பள என்று நிரூபிக்கத் தெரியாதவன் வன்முறையில் ஈடுபட்டு ஆம்பளை என்று நிரூபிக்க முற்படும்’ கோமாளித்தனத்தை பெண்கள் தமது வாழ்க்கை காலம் முழுவதும் மறக்காமல் தமது தோழிகளிடம் சொல்லிச் சிரிப்பார்கள். 

ஆண்மை கெட்ட இப்படியான தம்பிமார்கள் தற்போது வெளிநாட்டு அண்ணன்மார்கள் அனுப்பும் பணத்தில் யாழில் கொலை செய்யவும் தொடங்கி விட்டார்கள். குடித்து விட்டு தலை கால் புரியாமல் தாறுமாறாக மோட்டார் சைக்கிளை ஓட்டி, வீதி ஒழுங்கு விதிகளை சரிவர மதித்து பயணிக்கும் அப்பாவி பொதுசனங்களின் உயிர்களை பலி எடுக்கத் தொடங்கி விட்டார்கள். 

பெற்றோர்களே… ஜாக்கிரதை! பொண்ணுகளே… இன்னும் விழிப்பாக இருங்கள்!   

இதனுடன் தொடர்புடைய செய்தி இது தான்: 

இளைஞனின் அதிவேகத்தால் அப்பாவி குடும்பஸ்தர் யாழில் பலி: விதவையான மனைவி (Video)