அஸ்தி கரைக்க சென்ற குடும்பஸ்தர் கீரிமலை கேணியில் பரிதாப பலி

யாழ்ப்பாணம், நகுலேஸ்வரம் ஆலயத்தின் அருகில் அமைந்துள்ள கீரிமலை தீர்த்தக்கேணியில் நீராடிய குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

அஸ்தியினை கரைப்பதற்காக உறவினர்களுடன் சேர்ந்து கீரிமலைக்கு சென்றிருந்த பிரஸ்தாப குடும்பஸ்தர் அங்கு மாலை 6 மணியளவில் நீராடிய போதே மேற்படி துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த வடிவேல் அழகன் சுபாஸ்கரன் (வயது-40) என்ற குடும்பஸ்தர் பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.

உயிரிழந்தவரின் சடலம் மரண விசாரணைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.