களவெடுத்த பொலிசைக் கைது செய்த பொலிசார்!! மக்கள் அதிர்ச்சி

ஜனாதிபதியின் இணைப்பாளரபான ராஜூதின் ரபாயதின் என்பவரின் பணத்தை 17.12.2015 அன்று மட்டக்களப்புப் பகுதியில் உள்ள சம்பத் வங்கியில் வைத்து கையாடல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு அந்நேரத்தில் சாவகச்சேரி பொலிஸ்நிலைய பிரதம இன்ஸ்பெக்டராகக் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரி இன்று கைது மட்டக்களப்புப் பகுதியில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

சம்பத் வங்கியில் வைப்புச் செய்வதற்காக காத்திருந்த ஜனாதிபதியின் இணைப்பாளரிடம் அவருக்குத் தெரியாது அவரது பணப்பையைத் திருடிச் சென்றார் குறித்த பொலிஸ் அதிகாரி. இக் காட்சிகள் சீசீரி கமாரா மூலம் கண்டு பிடிக்கப்பட்டு திருடிய நபர் பொலிஸ் அதிகாரி என்பதையும்  அவர் சாவகச்சேரிப் பகுதியில் கடமையாற்றினார் என்பதும் கண்டு பிடிக்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்ட நீதவான் மா.கணேசராசா அவர்களிடம் உத்தரவு பெற்று குறித்த பொலிஸ் அதிகாரி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.