சங்கக்காராவின் கணிப்பு பலிக்குமா?

இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலககிண்ணத்தை இந்திய அணி கைப்பற்ற அதிகமான வாய்ப்பு இருக்கிறது என்று இலங்கை அணியின் முன்னால் அணித்தலைவர் சங்கக்காரா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, நெருக்கடியை கையாள்வதில் டோனி சிறந்தவர். அதுவும் இந்திய மண்ணில் விளையாடும் போது இதில் கைதேர்ந்தவர்.

அவர் இந்திய அணிக்கு நீண்ட காலமாக அணித்தலைவராக இருக்கிறார். நெருக்கடியை கையாள்வதில் அவரைவிட சிறந்த அணித்தலைவர் யாரும் இல்லை.

20 ஓவர் உலகக்கிண்ணத்தை வெல்ல இந்திய அணிக்கு வாய்ப்பு இருக்கிறது. உலகக்கிண்ண வெற்றிக்கு சுழற்பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும். இந்திய அணியில் உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீரர்கள் உள்ளனர்.