வடக்கு மாகாணசபையில் ‘நடுவில் ஒரு பக்கத்தைக் காணோம்’

வடமாகாண சபையின் சுகாதார அமைச்சின் நியதிச் சட்டத்தில், உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கோவையில் ஒரு பக்கம் தவறவிடப்பட்டிருந்தது.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்றது. இதன்போது, வடமாகாண சுகாதார அமைச்சின் நியதிச் சட்டம் தொடர்பில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, ஒரு பக்கத்தைக் காணவில்லையென உறுப்பினர்கள், கேள்விகேட்ட போது, தவறுதலாக அது கோவைக்குள் வரவில்லையெனக் கூறப்பட்டு, விடுபட்ட பக்கம் தனியாக அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது.