முதன்முறையாக இணைந்து நடிக்க தயாரான சூர்யா-கார்த்தி

சூர்யா நடிக்கும் ‘சிங்கம் 3’ படம், ‘எஸ் 3’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. இதில் சர்வதேச குற்றவாளிகளை வேட்டையாடும் சி.பி.ஐ அதிகாரியாக சூர்யா நடிக்கிறார்.ஹரி இயக்கும் இந்த படத்தில் அனுஷ்கா, சுருதிஹாசன், ராதிகா உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இப்போது ‘எஸ் 3’ படத்தில் சூர்யாவுடன் அவரது தம்பி கார்த்தியும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.சூர்யா நடித்த ‘ஆயுத எழுத்து’ படத்தில் கார்த்தி உதவி இயக்குனராக பணியாற்றினார். இப்போது இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இதனால் ‘எஸ் 3’ படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகாரித்துள்ளது.

‘எஸ் 3’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் தொடங்கியிருக்கிறது. அடுத்ததாக மூன்றாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளனர். தொடர் வெற்றிகளுக்கு பிறகு சூர்யா-ஹரி கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.