புகழ்ச்சி எனக்கு பிடிக்காது: அனுஷ்கா

புகழ்ந்து பேசுவது எல்லோருக்கும் பிடிக்கும். ஒருவரை இன்னொருவர் உயர்வாக பேசினால் அது சம்பந்தப்பட்டவருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும், தலையில் ஐஸ் வைத்த மாதிரி குளிர்ந்து போவார். ஆனால், என்னைப் பொறுத்தவரை புகழ்ச்சி என்பது பிடிக்காது.

எனது நடிப்பை விமர்சனம் செய்தால், அதனை கூர்ந்து கவனிப்பேன். இந்த கதாபாத்திரம் சரியல்ல. இன்னும் சிறப்பாக நடித்து இருக்கலாம் என்று சொன்னால் அதன்படி என்னை மாற்றிக்கொள்ளவும் முயற்சிப்பேன். குறைகள் சொன்னாலும் அதை ஏற்றுக்கொண்டு திருத்திக்கொள்வேன்.ஆனால், புகழ்ந்து பேசினால் தடுமாற்றம் தான் வரும், வெட்கப்படுவேன்.

எப்படி பதில் சொல்வது என்று தெரியாமல் புலம்புவேன். சிரிப்பை மட்டும் பதிலாக கொடுத்துவிட்டு, புகழ்ந்து பேசுபவர்களிடமிருந்து விலகிச் சென்றுவிடுவேன். என்னை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் தான் புகழ்கிறார்கள். அதை நான் விரும்புவதில்லை.சில நேரங்களில் நான், கரினா கபூரை போல் இருப்பதாக ஒப்பிட்டும் பேசுகிறார்கள்.

கரினா கபூர் எனக்கு பிடித்த நடிகை. விமர்சனங்களையும், பாராட்டுக்களையும் எப்படி எடுத்துக் கொள்ளவேண்டும் என்று எனக்கு தெரியும். அதன்படியே எனது சினிமா வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறேன்.இவ்வாறு அனுஷ்கா கூறினார்.