யாழ். நாவலர் வீதியில் திருட்டில் ஈடுபட்டவர்களின் வீடியோ (Video)

இந்த வீடியோவில் உள்ள திருடர்களை உங்களுக்கு அடையாளம் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தகவல் கொடுத்து உதவவும். அல்லது இங்கு கீழே உள்ள கருத்து பெட்டியில் பதிவிடவும்.

தொடர்புடைய செய்தி:

யாழ். நாவலர் வீதியில் உள்ள வீட்டில் 8 அரை இலட்சம் நகைகள் களவு 

1ஆம் இணைப்பு

ரிசிரி பல்பொருள் வாணிப நிறுவனத்துக்கு அருகில் உள்ள வீடொன்றில் நேற்று பட்டப்பகலில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மிக அதிகமான சன நடமாட்டம் உள்ள இடமான குறித்த வீதியில் இத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றதால் அப்பகுதியில் உள்ளவர்கள் மிகப் பதற்றமடைந்திருந்தார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக குறித்த வீட்டில் உள்ளவர்கள் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர். குறித்த வீட்டில் எட்டரை லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் அந்த நகைகளை பழுதான ஒரு தொலைக்காட்சிப் பெட்டிக்குள் தாம்  மறைத்து வைத்திருந்ததாக வீட்டு உரிமையாளர் பொலிசாரிடம் முறையிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த வீட்டில் திருடியவர்கள் இரு சைக்கிளில்களில் வந்த காட்சிகள் வீடியோ ஆதாரமாக எமக்குக் கிடைத்துள்ளன. இதனை ஆதாரமாக வைத்து பொலிசார் குறித்த திருடர்களைக் கைது செய்யப்படுவர் என நம்பிக்கையான தகவல்கள் தெரிவிக்கின்றன.