மாற்றத்தின் நாயகனை வெகுவாகப் பாதித்த கொலை

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை "மாற்றத்தின் நாயகனை" வெகுவாகப் பாதித்திருக்கிறது என்பது உண்மையே!

இதனை செய்த பொலிசார் மீது "தலை" கடுங் கோபம் கொண்டுள்ளது என்பதும் உண்மையே!

அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும் உண்மையே!

இதெல்லாம்.....

அந்த பொலிசார் செய்த அநீதிக்காக அல்ல!

அவர்களின் அவசரப் புத்திக்காக!

அவர்களின் முட்டாள்தனத்துக்காக!

அவசரப்படாமல் மெல்ல, மெல்ல, வாழைப்பழத்தில் ஊசி ஏத்துவது போல் செய்யப்படவிருந்த "அழிப்பு" வேலையை அவசரப்பட்டு குழப்பியடித்ததற்காக!

அதிகார வர்க்கங்கள் தங்கள் எதிரிகளை மன்னித்தாலும் மன்னிப்பார்கள்.

ஆனால் தம்மிடையே இருக்கும் "முட்டாள்களை" ஒருபோதும் மன்னிப்பதில்லை.

என்ன காரணத்துக்காக மகிந்த ஐ வீட்டுக்கு அனுப்பி வைத்தார்களோ அதே காரணத்துக்காக சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பொலிஸ் காடையர்களை தூக்கில் ஏற்றவும் செய்வார்கள்.

ஞானதாஸ் காசிநாதர்-