யாழில் மதுரை மல்லிகை

யாழில் புன்னாலை கட்டுவன் வடக்கு பகுதியில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் சனசமூக நிலையத்தில் மதுரையிலிருந்து தருவிக்கபட்ட மல்லிகைக் கன்று நாட்டு நிகழ்வில் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவரும், யாழ் மாவட்ட முதல் தமிழ் பெண் ஜக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் , முதலாவது (யாழ் மாவட்டத்தின் தமிழ் பெண் அமைச்சருமான) சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சருமான கெளரவ திருமதி விஐயகலா மகேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இந்தியத் துணைத்தூதுர் கே.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மதுரை வர்த்தக சங்கத் தலைவர் உட்பட சுமார் 30 இந்திய வர்த்தகர்கள் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சருமான கெளரவ திருமதி விஐயகலா மகேஸ்வரன் அவர்களுடன் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.