யாழில் கழிவறைகள் இல்லாத கல்விநிலையங்களாக கல்லறைகள்

வல்வெட்டித்துறை வங்கிக்கு அருகாமையில் உள்ள மொடேன் கல்வி நிலையம். எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் பல வருடங்களாக இயங்கி வருகிறது. யாழ்குடா நாட்டில் இவ்வாறு பல நூறு கழிவறைகள் இல்லாத கல்வி நிலையங்களாக கல்லறைகள் இருந்து வருகின்றது. 

கடைக்கு என கட்டப்பட்ட கட்டிடத்தில் வகுப்புகள் நடைபெறுகின்றது. 

காற்றோட்டம் இல்லாமல் அதிக வெப்பத்தை தாங்கி கொண்டு மாணவர்கள் கல்வி கற்க வேண்டி உள்ளது. 

1000 வரையில் தரம் 6 மாணவர்களிடம் கூட சம்பள காசு வாங்கப் படுகிறது. 

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளரான நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய வல்வெட்டித்துறை நகரசபை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காரணம் வல்வெட்டித்துறை நகர சபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளூகைக்குள் 2015 வரை இருந்துள்ளது.

குறித்த மொடேன் தனியார் கல்வி நிலையம் கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. 

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொது சுகாதார பரிசோதகரும் பொறுப்பற்ற வகையில் நடந்து வருகின்றார்.

இவ் மோடேன் தனியார் கல்வி நிலைய நிர்வாகி பெயர் கு.தவக்குமார். 0777079536.

அடிப்படை வசதிகள் இல்லாத தனியார் கல்வி நிலையங்களை சீர்செய்ய அல்லது வழக்கு தொடர அல்லது மூடுவதற்கு உரிய அதிகாரம் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளுக்கும் உள்ளது.

யாழ் குடா நாட்டில் கழிவறை என்பது பெண்களின் உரிமை! 

யாழ் குடா நாட்டில் கழிவறைகள் கழிவறையின் முக்கியத்துவம் இன்னும் பெரும்பாலான கல்வி நிலையம்களில் உணரப்படவில்லை. யாழ் குடா நாட்டில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொது சுகாதார பரிசோதகரும் பொறுப்பற்ற வகையில்அதை உணர்த்தவும் முன்வரவில்லை. 

யாழ் குடா நாட்டில் அன்றாடம்  அழுத்துகிற பிரச்னைகளுக்கு மத்தியில் கழிவறையைப் பற்றி யோசிக்கவும் யாழ் குடா நாட்டில் தனியார் கல்வி நிலையங்களில் பராயமடைந்த மாணவிகள் நிலை மிகவும் வேதனைகரமானது.  

யாழ் குடா நாட்டில் கிராமங்களிலேனும் ஒதுக்குப்புறங்கள் உள்ளன. இயற்கை உபாதையை தீர்க்க ஓரங்கள், இடிந்த கட்டிடங்களை நாட வேண்டியிருக்கிறது.

யாழ் குடா நாட்டில் மறைந்திருக்கும் மாபெரும் சமூக  அவலம் வெளித்தெரிவதில்லை. 

யாழ் குடா நாட்டில் பாடசாலைகளிலும் தனியார் கல்வி நிலையங்களிலும் கழிவறை இல்லாததால் பெண்கள் எதிர்கொள்ளும் விளைவுகள் ஏராளம். சுகாதாரம் சார்ந்தவை ஒரு பக்கம். யாழ் குடா நாட்டில் சேரும்  கழிவுகள் மழைக்காலத்தில் குடிநீரோடு கலந்து பல நோய்கள் உருவாகின்றன. புதர்களில் மறைந்திருக்கும் பாம்பு, தேள் போன்ற உயிர்க்கொல்லிகள்  தீண்டி உயிரிழக்கும் அபாயம். இது தவிர யாழ் குடா நாட்டில் பாடசாலைகளிலும் தனியார் கல்வி நிலையங்களிலும் பாலியல் தொந்தரவுகள்.

யாழ் குடா நாட்டில் பாடசாலைகளிலும் தனியார் கல்வி நிலையங்களிலும் சாமியறையைப் போல  கழிவறையும் வாழ்க்கை தேவைக்கு அவசியம் என்ற புரிதலைத்தான் நாம் கிராமத்து மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டியிருக்கிறது.

யாழ் குடா நாட்டில் பாடசாலைகளிலும் தனியார் கல்வி நிலையங்களிலும்  பெண்ணின் வதையை ஆண் எக்காலத்திலும் உணரப்போவதில்லை. அவர்கள் இடம், பொருள், ஏவல் எதையும் பொருட்படுத்துவதில்லை. பெண்களால் அப்படி முடியாது. கழிவறை இல்லாத பகுதிகளில் பெண் குழந்தைகள் படும்பாடு துயரமானது. 

பகல் நேரத்தில் எவ்வளவு  அவசரமாக இருந்தாலும் அடக்கிக்கொள்ள வேண்டும். தலைமுறை தலைமுறையாக பெண்கள் அப்படியே யாழ் குடா நாட்டில் பழகி விட்டார்கள். யாழ் குடா நாட்டில் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் கர்ப்பிணிகள்  அடிக்கடி யூரின் போக வேண்டியிருக்கும். திறந்தவெளியில் போக சங்கடப்பட்டுக்கொண்டு அடக்கிக் கொள்கிறார்கள். அது குழந்தையையே பாதிக்கும். வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள்  வந்தாலும் அவஸ்தை. 

யாழ் குடா நாட்டில் தனியார் கல்வி நிலையங்களில் பராயமடைந்த மாணவிகள் இயற்கை உபாதையை அடக்குவது மிகப்பெரும் ஆரோக்கிய குறைபாட்டை ஏற்படுத்திவிடும். அண்மைக்காலமாக ஏராளமான  பெண்களுக்கு யூரினரி பிளாடர் என்ற பாதிப்பு உண்டாகியிருக்கிறது. சிறுநீரை அடக்குவதால் சிறுநீர் பையானது நெகிழ்வுத் தன்மையை இழந்து  விடும்நிலை. 

வடமராட்சி தென்மராட்சி மற்றும் வலிகாமம் தீவகம் பகுதியில் பாடசாலைகளில் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவிகளுக்கு ஒரே கழிவறை. கழிவறையில் கால் கூட வைக்கமுடியாது. அந்த அளவுக்கு மோசமாக இருக்கும். வீட்டில் இருந்து  வந்துவிட்டால் திரும்பவும் வீட்டுக்குப் போன பிறகுதான் இயற்கை உபாதையை தீர்த்துக்கொள்ள முடியும். அது எவ்வளவு ஆபத்து ?

வடமராட்சி தென்மராட்சி மற்றும் வலிகாமம் தீவகம் பகுதியில் பாடசாலைகளில் ஆயிரம் மாணவர்கள். 3  அறை கொண்ட ஒரே ஒரு கழிவறைதான். இன்டர்வெல் விட்டதும் பெண் குழந்தைகள் வரிசையில் நிற்பதைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். பல பள்ளிகளில் இன்னும் அந்தத் தேவை தீர்க்கப்படவில்லை. 

வடமராட்சி தென்மராட்சி மற்றும் வலிகாமம் தீவகம் பகுதியில் பாடசாலைகளில் மாதவிடாய் காலத்தில் துணிகளை பயன்படுத்தும் வழக்கமே இருக்கிறது.  அந்தத் துணிகளை அப்படியே உள்ளே போட்டுவிடுவார்கள். இதைச் சுத்தப்படுத்த ஒருவரைத் தேட வேண்டியிருந்தது. 

இது பற்றி வடமராட்சி தென்மராட்சி மற்றும் வலிகாமம் தீவகம் பகுதியில் மாணவிகளிடம்  பேசினால், பள்ளிக்கு வருவதையே நிறுத்தி விடுகிறார்கள். இது ஒரு சமூக அவலம்....

நினைக்கவே அச்சமாக இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு இழைக்கும் அநீதி. கிராமங்களில் இருந்து மாற்றத்தை தொடங்க வேண்டும். 

யாழ் குடா நாட்டில் இந்த புதிய 2016 ஆண்டிலும் ‘‘கிராமத்துப் பெண்கள் இயற்கை உபாதைகளை கழிக்க ஒதுக்குப்புறமான மறைவிடங்களுக்கு செல்கிறார்கள். ஆனால், திறந்தவெளியிலேயே குளிக்க வேண்டியிருக்கிறது. குளங்கள்களில் போதிய அளவுக்கு தண்ணீர் இல்லை. இது மிகவும் தர்மசங்கடத்தை உருவாக்குகிறது. பல பிரச்னைகளுக்கும் காரணமாகிறது. கண்ணியமான வாழ்க்கைக்கு இது இடையூறு. 

வடமராட்சி தென்மராட்சி மற்றும் வலிகாமம் தீவகம் பகுதியில் பாடசாலைகளிலும் தனியார் கல்வி நிலையங்களிலும் கழிவறை என்பது அடிப்படைத் தேவை. அடிப்படை உரிமை. பெண்களை தெய்வமாக வணங்கும் நாடு இது. பெண்களுக்கு  கோயில் கட்டி கும்பிட வேண்டாம். தயவு செய்து கழிவறை கட்டிக்கொடுத்து அவர்களின் கௌரவத்தைக் காப்பாற்றுங்கள்.